நடுராத்திரியில் ரெய்டு செய்து ஜம்மு காஷிமீர் கிரிக்கெட் வீரர்களை அவமானப்படுத்திய போலீஸ்!
, வெள்ளி, 27 டிசம்பர் 2013 (13:35 IST)
ஜம்மு காஷ்மீர் அணி ஐதராபாத் அணியுடன் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடியது. அன்று கிறிஸ்துமஸ் தினம் உலகம் முழுதும் திருக்கோயில்களுக்கு மக்கள் சென்று கேக்குகளையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்ட நேரத்தில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வீரர்களை பெரும் அவமானத்திற்கு உள்ளாக்கியுள்ளது ஜம்முபோலீஸ்.
புதனன்று ஐதராபாத் உடனான அந்த ரஞ்சி போட்டியின் இறுதி நாள், இந்த ஆண்டு ஜம்மு அணி சிறப்பாக ஆடி வருகிறது. மறுநாள் ஆட்டத்திற்கான கடுமையான ஆயத்தங்களைச் செய்துவிட்டு வீரர்கள் விடுதியில் நன்றாக உறங்கிவிட்டனர்.
அப்போது திடீரென ஆயுதங்களுடன் போலீஸ் கும்பல் வீரர்கள் தங்கியிருக்கும் விடுதி அறைக்குள் புகுந்து அடையாள அட்டையை எடு, அது இது என்று ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்டு அவர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல் விசாரணை செய்துள்ளது ஜம்மு போலீஸ்.