சேரனின் வழக்கறிஞர் கருத்து - வெப்துனியா நேரடி ரிப்போர்ட்
, புதன், 21 ஆகஸ்ட் 2013 (18:06 IST)
திரைப்பட இயக்குனர் சேரன் மகள் தாமினி வழக்கில் இன்றைய விசாரணை குறித்து சேரனின் வழக்கறிஞர் ராஜா நமது வெப்துனியா இணையதளத்திற்கு அளித்த பேட்டி.21.08.13
ஆன இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் சேரன் மகள் தாமினி வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதில் தாமினியை நீதிபதிகள் நேரடியாக அழைத்து தாமினியின் வாக்குமூலத்தையும், அவரின் மனநிலையையும் கேட்டறிந்தனர். இதில் தாமினி தனது தந்தையுடன் செல்வதாக முடிவெடுத்தார். இதற்கு தாமினியின் காதலன் சந்துரு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். எதிர்தரப்பு வாதத்தில் தாமினி 15 நாட்கள் காப்பகத்தில் இருந்ததால் சேரன் தரப்பு மிரட்டியிருக்கலாம் அல்லது குழப்பமடையச் செய்திருக்கலாம். எனவே சேரனுடன் தாமினியை அனுப்பக் கூடாது என்று அவர்கள் வாதத்தை முன் வைத்தனர்.ஆனால் தாமினி, நான் என் அப்பாவுடன் தான் போவேன் என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்ததார். ஆனால் எதிர்தரப்பு வாதத்தில், 15 நாட்களுக்கு முன்பு காதலனுடன் வாழ வேண்டும் என்று சொன்ன தாமினி, நீதிமன்றக் காவலில் இருந்த இந்த இரண்டு வார காலத்தில் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் தான் கூறப்பட்டதே தவிர மிரட்டப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. நீதிபதிகள் இரண்டு, மூன்று முறை கேட்ட போதும், தெளிவாக நான் தற்போது உள்ள மனநிலையில் பெற்றோருடன் செல்லவே விரும்புகிறேன் என தாமினி தெரிவித்தார்.நீதிபதிகள் நீதிமன்றத்திலேயே தனிமையில் தாமினியை யோசிப்பதற்கு அனுமதித்தார். நேரம் ஒதுக்கினார். இதைத் தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு தாமினியை அழைத்து இறுதியாக நீதிபதிகள் கேட்ட போதும் தான் பெற்றோருடன் செல்லவே விரும்புகிறேன். இது என் சுயமான முடிவு இதில் யாருடைய நிர்பந்தமும் இல்லை என்று கூறினார்.இவ்வாறு சேரனின் வழக்கறிஞர் ராஜா தெரிவித்தார்.