Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியரே இல்லாமல் தமிழ்நாட்டில் 16 அரசுப் பள்ளிகள்!

ஆசிரியரே இல்லாமல் தமிழ்நாட்டில் 16 அரசுப் பள்ளிகள்!
, செவ்வாய், 23 ஜூலை 2013 (15:33 IST)
FILE
தமிழ் நாட்டில் 16 அரசுப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது.

ஆர்.எம்.எஸ்.ஏ. என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்துள்ளது.

பெருநகரமான சென்னையும் இந்த பட்டியலில் உள்ளதுதான் பெரும் அதிர்ச்சி. வேலூர், நீலகிரி, மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள மொத்தம் 16 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லை!!

இதைவிட அதிர்ச்சிகரமான விஷயம்: 2,253 பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர் மட்டும் இருப்பதாகவும் அந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 195 பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். திருவண்ணாமலையில் 159 பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் 134 பள்ளிகளிலும், வேலூர் மாவட்டத்தில் 127 பள்ளிகளிலும் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார். இதுதவிர 16,421 பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

இது போன்று செயலற்று கிடக்கும் அரசுப் பள்ளிகளினால் 10 மற்றும் +2 வகுப்பு மாணவர்கள் உட்பட சுமார் 80,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக இந்த கணக்கெடுப்பு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil