பைலட்டாக இருந்தபோது ஆயுதபேரத்தில் புரோக்கர் வேலை பார்த்த ராஜீவ் காந்தி!
, திங்கள், 8 ஏப்ரல் 2013 (10:16 IST)
1970
ஆம் ஆண்டுகளிலேயே, காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்தி முக்கிய உறுப்பினராவதற்கு முன்பே பைலட்டாக இருந்த காலத்திலேயே ஸ்வீடன் நிறுவனமான சாப் ஸ்கேனியா என்ற போர் விமான தயாரிப்பு நிறுவனத்திற்கு இடைத் தரகராக ராஜீவ் காந்தி செயல்பட்டுள்ளதாக விக்கி லீக்ஸின் அடுத்த பரபரப்பு வெளியாகியுள்ளது.இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழ் இந்து, விக்கி லீக்ஸுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு விசாரணை உடன்படிக்கைகளின் படி விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள்லின் விவரம் வருமாறு:அப்போது ஸ்வீடனின் சாப் ஸ்கேனியா நிறுவனம் தனது விக்கென் போர் ஜெட் விமானத்தை இந்தியாவின் தலையில் கட்ட போராடி வந்தது. ஆனால் இந்த டீலில் ராஜீவ் காந்தியின் இடைத்தரகர் வேலை பயனளிக்கவில்லை. இந்த ஒப்பந்தம் பிரிட்டிஷ் நிறுவனமான SEPECAT-யிற்கு சென்றது.இதெல்லாம் ராஜீவ் காந்தி இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்டாக இருந்தபோதே அரங்கேறியதாம்! விக்கிலீக்ஸின் சமீபத்திய கிசிங்கர் கேபிள்ஸ் வெளியீடுகளின் படி இந்த பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.இந்தியாவின் ராணுவத்திற்கு தேவைப்படும் அனைத்து ஆயுதங்களின் பேரத்திலும் 'இந்திரா குடும்பம்' தலையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.சஞ்ஜய் காந்தி இறந்தவுடன் காங்கிரஸில் மிஸ்டர் கிளீன் என்ற இமேஜுடன் நுழைந்த ராஜீவ் காந்தி போபர்ஸ் ஊழலில் சிக்கிச் சின்னாபின்னமானதால் 1989அம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியையே இழ்னதுள்ளது.தற்போது வெளியாகியுள்ள கிசிங்கர் கேபிள்ஸ் படி 1974 முதல் 1976 வரை இந்தியாவில் நடந்த ஆயுத பேரங்களில் 'குடும்பம்' பெருமளவு ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.எந்த ஒரு ஆயுத கொள்முதல் விவகாரத்திலும் ஆட்சியில் உள்ள இந்திய்ரா குடும்பத்தின் தாக்கம் இருப்பதாக ஸ்வீடன் கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய விமானப்படையின் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டு திருமதி காந்தி தானே பேரத்தை முன்னின்று நடத்தியதாக மற்றொரு கேபிள் தெரிவித்துள்ளது.இந்த புதிய விவரங்கள் மேலும் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.