Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவமனைகளின் முறைகேடுகள்!

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவமனைகளின் முறைகேடுகள்!
, வியாழன், 28 மார்ச் 2013 (18:11 IST)
தேவை கறார் நடவடிக்கை
ஏழைகளின் நன்மைக்காக நம் அரசியல்வாதிகள் அரிதாக கொண்டு வரும் சில பயனுள்ள, நல்ல திட்டங்களிலும் கோல்மால் செய்து சுயலாபம் தேடும் இது போன்ற மருத்துவமனைகளுக்கு ரமணா பட பாணியில் சீல் வைக்கவேண்டும். செய்யுமா ஜெயலலிதா அரசு?
webdunia
அரசுக் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் நூதனமான முறைகேடுகள் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் உள்ள 5 மருத்துவமனைகள் உட்பட 35 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஸ்டார் ஹெல்த் என்ற தனியார் நிறுவனம் இதனை எடுத்து நடத்தி வந்தது.

பின்பு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது.

முதலைமச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 800 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டன. இத்திட்டத்தை ஊட்டி வளர்க்க நிதிநிலை அறிக்கையில் ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டது.

தற்போது தனியார் மருத்துவமனைகள் பல காப்பீட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவர்கள் குழு ஒன்றின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசுக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து பணம் பெறுவதற்காக சில தனியார் மருத்துவமனைகள் போலிக் கணக்குகளை சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஒரு உதாரணம் கூறவேண்டுமென்றால் நோயாளி ஒருவருக்கு இந்தத் திட்டத்தின் அறுவை சிகிச்சை செய்ததாக கணக்கு காட்டி அரசிடமிருந்து பணம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதே நோயாளிக்கு வேறொரு மருத்துவமனையில் இந்த சிகிச்சை நடந்ததாக தெரியவந்துள்ளது. செய்யாத அறுவை சிகிச்சைக்கு பணம்கோரும் மோசடி!!

மேலும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஆன்னால் அறுவை சிகிச்சைக்குப் பிறகான கவனிப்பு இல்லாததால் அந்த நோயாளி இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் சில மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நபருக்கு சிகிச்சை அளித்து அதற்கான பில்லை சமர்பித்து அரசிடமிருந்து தொகையைப் பெற்ற பிறகு அந்த நோயாளியிடமும் தொகையை வச்சூல் செய்துள்ள திடுக்கிடும் விவரமும் ஆய்வில் தெரியவந்துள்லதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சில மருத்துவமனைகள் தங்களக்கு பயனில்லையெனில் நோயின் தன்மையை கணிக்கும்போது அதன் தீவிரத்தை குறைத்து மதிப்பீடு செய்கின்றனர். இதனால் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு இவ்வளவு காப்பீட்டுத் தொகை அரசாங்கம் அளிக்கும் என்பதில் குறைவு ஏற்படுகிறது.

உதாரணத்திற்கு மார்பகப் புற்றுநோயின் தீவிரத்தை குறைத்துக் காண்பித்து ரிபோர்ட் தயாரித்தால் நோயாளிக்கு குறைவான தொகையே கிடைக்கும். உண்மையில் நோய் தீவிரமாக இருக்கும்போது மருத்துவமனைகள் தங்களுக்கு அதில் பயனில்லை எனும்போது குறைவான அளவில் நோயின் தீவிரத்தைக் காண்பிப்பது.

தங்களுக்கு பயன் இல்லை எனில் அந்த நோய்க்கு மருத்துவக் காப்பீட்டு வசதி கிடையாதே என்ற சில மருத்துவமனைகள் கூறிவிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இப்போது ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவமனைக்கு காப்பீட்டில் ஒதுக்கப்படும் தொகையை விட மருத்துவமனைக்கு 50,000 அதிகம் செலவாகும் என்றால் இழப்பு ஏற்படும் என்பதற்காக உண்மையை மறைக்கும் மருத்துவமனைகளும் உள்ளதாக கடும் புகார்கள் எழுந்துள்ளன.

ஏழைகளின் நன்மைக்காக நம் அரசியல்வாதிகள் அரிதாக கொண்டு வரும் சில பயனுள்ள, நல்ல திட்டங்களிலும் கோல்மால் செய்து சுயலாபம் தேடும் இது போன்ற மருத்துவமனைகளுக்கு ரமணா பட பாணியில் சீல் வைக்கவேண்டும். செய்யுமா ஜெயலலிதா அரசு?

Share this Story:

Follow Webdunia tamil