தமிழினப் படுகொலைக் களங்கள் சுற்றுலாத் தலமா?
, சனி, 19 ஜனவரி 2013 (16:24 IST)
இந்தப் பகுதிகளில் உள்ள இடங்களுக்கு தெளிவாக தீவிரவாதிகளின் இடம் என பெயரிட்டுள்ளனர். உதாரணமாக தீவிரவாதியின் நீச்சல்குளம் என்று பெயரிட்டுள்ளனர்.
இலங்கை அரசு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் இளமைக்கால வீட்டையும், புலிகளின் மாவீரர் சமாதிகளையும் இடித்துவிட்டு புலிகளின் பதுங்குகுழிகளை மட்டும் போர் அருங்காட்சியகமாக மாற்றிவிட்டது. இதோடு மட்டுமல்லாமல் படுகொலைகள் நடந்த களங்களையும் சுற்றுலாத் தலமாக, காட்சிப்பொருளாக மாற்றியுள்ளது இலங்கை அரசு.கடந்த 2009 ஆம் ஆண்டு சுமார் 40,000 தமிழர்களை ஒரே இடத்தில் இனப்படுகொலை செய்த இடத்தில் தற்போது மண்டையோடுகளும் எலும்புகளும் மண்ணிலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ளதாக சமீபத்தில் பயணம் செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்களை மொத்தமாக ஒரே இடத்தில் வைத்து கொன்று குவித்த இலங்கை அரசு, அனைவரையும் அதே இடத்தில் குழி தோண்டி மொத்தமாக புதைத்துவிட்டதாக அப்போதே குற்றச்சாற்று கிளம்பியது. ஆனால் இந்த குற்றச்சாற்றுக்களை இலங்கை அரசு தொடர்ச்சியாக மறுத்து வந்தது.
ஆனால் இத்தனை ஆண்டுகால மழை, வெள்ளம், காற்று ஆகியவற்றால் நிலத்தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மண்டையோடுகளும், எலும்புக்கூடுகளும் வெளியே வரத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்துத் தெரிவித்த பயணி ஒருவர், இன்னும் பதுங்குகுழிக்குள் பெண்களின் சேலைகள், குழந்தைகளின் உடைகள், சூட்கேஸ்கள் திறந்த நிலையில், இவையெல்லாவற்றுக்கும் மேலாக மனித எலும்புகள் மண்டையோடுகள் என அந்தப்பகுதி கண்ணால் காண முடியாத கொடூரமான பகுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.