Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெறுப்புணர்வைத் துறப்பதே அமைதிக்கு வழி!

வெறுப்புணர்வைத் துறப்பதே அமைதிக்கு வழி!
மகாத்மா காந்தியின் 139வது பிறந்த நாளான இன்று, ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் அவரது சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்படும், டெல்லியில் உள்ள அவரது சமாதியில் நமது நாட்டின் தலைவர்கள் மலர் வளைத்து அஞ்சலி செலுத்துவார்கள். அவ‌ர் கடைபிடித்த அகிம்சை கொள்கை ஈடிணையற்றது என்றும் பேசுவார்கள். இன்றும் அதுவே நடைபெறப்போகிறது. அந்தக் காட்சி பத்திரிக்கைகளில் இருந்து தொலைக்காட்சிச் செய்திகள் வரை இடம்பெறும்.

  FILE
இதைக் கூறுவதற்குக் காரணம், நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை வகித்து, சாத்வீக வழியில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி இந்திய விடுதலையை பெற்றுத்தந்த தேசத் தந்தை மகாத்மா காந்தி, தனது வாழ்வின் இறுதி மூச்சுவரை கடைபிடித்து உபதேசித்த அகிம்சை எனும் உன்னத வாழ்வு நெறி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் இந்நாளில் மட்டுமே, அவரால் விடுதலைப் பெற்ற தேசத்தில் பேசப்படும் ஒரு விடயமாகிவிட்டது என்பதை சுட்டிக்காட்டுவதற்கே.

ஏனெனில் அகிம்சை எனும் அந்த வாழ்க்கை நெறி இன்றைய இந்தியர்களாகிய நம்மால் ஏற்க முடியாத, கடைபிடிக்க முடியாத, இன்று நாம் வாழ்ந்துவரும் வாழ்விற்கு சற்றும் ஒத்துவராத ஒரு சித்தாந்தம். அது காந்திக்கு மட்டுமே பொருந்தும், பொருந்தியது. மற்றவர்களால் அதனைக் கடைபிடித்து வாழ இயலாது. ‘உலகம் பயித்தியக்காரன் என்று பேசும்’ என்று நாம் அந்த நெறியை கடைபிடிக்க முற்படுவோரை ஏசும் நாளிது.

என்னதான் நமது வாழ்க்கை அரசியல் ரீதியானது, சமூக ரீதியானது, பொருளாதார ரீதியானது என்று கூறினாலும், நமது அன்றாட வாழ்க்கை, உழவரானாலும், கற்ற அலுவலக பணியாளானாலும், அது முற்றிலும் பொருளாதாரச் சார்பு கொண்ட வாழ்க்கையாக மட்டுமே உள்ளது. பொருளாதாரத்தைச் சார்ந்த ஒரு வாழ்வை மேற்கொள்ளும் ஒரு சமூகத்தில் உயர்ந்த நெறிகளுக்கு உரிய இடம் இல்லாமல் போவது இயற்கையானதே. அதற்கிணங்க, நம்மிடையே அகிம்சை எனும் அந்த மாபெரும், அதே நேரத்தில் மிக எளிமையான, ஒரு வாழ்வியல் கோட்பாட்டிற்கு மரியாதை இல்லாமல் போனதும் இயற்கையானதே.

இப்போது அகிம்சைக்கு முன்னெப்போதும் இல்லாத ஒரு அவசியம் வந்துவிட்டதுதான் நம்மை மிகவும் சிந்திக்கச் செய்கிறது. இன்றைக்கு நாம் (கிட்டத்தட்ட அன்றாடம்) சந்தித்துவரும் பிரச்சனைகளில் தலையாய சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாமல் விழி பிதுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு அகிம்சை நெறியே - அது மட்டுமே - ஒரு தீர்வைக் கூறுகிறது.

இன்று நாம் சந்தித்துவரும் எரிபொருள் பிரச்சனைக்கல்ல, நாளும் ஏறிவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்தி நமது ரூபாயின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அல்ல (அப்படி மட்டும் இருந்தால் விட்டுவிடுமா ஆர்.பி.ஐ.?), பிரதமர் மன்மோகன் சிங் கவலையுடன் கூறியிருக்கும் நமது நாட்டின் பொருளாதார பிரச்சனைக்கல்ல. இதையெல்லாம் தீர்த்துக்கொள்ளக்கூடிய திறனும், பலமும் இந்தியாவிற்கு உள்ளது. பிறகு வேறெதற்கு?

webdunia
  FILE
நமது நாட்டின் ஒற்றுமையை - சமூக ரீதியான ஒற்றுமையை - நிலைகுலைய வைத்து சீரழித்துவரும் வன்முறையை வழிமுறையாகக் கொண்ட மதவாதத்தையும், இந்திய சமூகத்தின் அமைதியை நாளும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பயங்கரவாதத்தையும் முற்றிலும் அழிக்க நிரந்தரத் தீர்வை அளிக்கிறது மகாத்மா காந்தி கூறிய அந்த உன்னத நெறி.

மகாத்மா கூறியது இதுதான்:

நமது நாட்டின் அரசியல் அடிப்படையான ஜனநாயக சமூக அமைப்பை பலப்படுத்த அகிம்சையே ஒரே வழி என்று காந்தி கூறியுள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு அல்ல... அதற்கு முன்னரே.

webdunia
வெள்ளையரின் அடிமைத் தளையில் இருந்து இந்த நாட்டை மீட்க 1942ஆம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை முன்மொழியும் தீர்மானத்தை காங்கிரஸின் செயற்குழுக் கூட்டத்தில் முன்மொழிந்த மகாத்மா காந்தி, அந்தப் போராட்டம் அகிம்சை வழியிலேயே நடைபெறவேண்டும் என்பது தான் வைக்கும் முன் நிபந்தனை என்று வலியுறுத்தி ஆற்றிய உரையில் இவ்வாறு கூறியுள்ளார்:

நமதநாட்டினவிடுதலைக்காநாமமேற்கொண்டுவருமஜனநாயபோராட்டத்தைபபோவேறெந்நாட்டிலுமநடைபெற்றதாநானஉலவரலாற்றிலகண்டதில்லை. சிறையிலஇருந்தபோதபிரெஞ்சபுரட்சியைபபற்றி கார்லைலஎழுதிபுத்தகத்தைபபடித்தேன். ரஷ்யபபுரட்சியைபபற்றி பண்டிடஜவஹர்லாலநேரஎன்னிடமவிளக்கினார். என்னைபபொறுத்தவரை, ஆயுதங்களைக்கொண்டு நடத்தப்படுமபோராட்டமஜனநாயலட்சியத்தநிறைவேற்றுவதிலதோல்வியுறுமஎன்றநானஉறுதியாநம்புகிறேன். நானவிரும்புமஅந்ஜனநாயகமஎன்பது, வன்முறதவிர்த்தசாத்வீவழியிலநிலைநிறுத்தப்படுமஜனநாயகமஅனைவருக்குமசரிசமமாசுதந்திரத்தபெற்றுததரும். ஒவ்வொருவருமஅவரவருக்கஎஜமானன்தான். அப்படிப்பட்ஜனநாயகத்திற்காபோராட்டத்திற்கநானஉங்களஅழைக்கின்றேன். இதனநீங்களஅடையும்போதஇந்து, முஸ்லீமஎன்வேறுபாடுகளமறந்துவிடுவீர்கள், இந்தியர்களநாமஎன்எண்ணத்துடனஅனைவருமஇணைந்தவிடுதலைக்காபோராடுவீர்க‌ள் ”.

நம்முள் இன்று நிலவும் சாதி, மத ரீதியான வேறுபாடுகளுக்கெல்லாம் காரணம், நாம் பெற்ற சுதந்திரமும், அதன்பிறகு நாம் நமது அரசமைப்பின்படி ஏற்படுத்தியுள்ள இந்த ஜனநாயக அரசியல் என்பதும் எந்த அடிப்படையிலானது என்பதை அன்றே மகாத்மா காந்தி தெளிவாக விளக்கியுள்ளார். வன்முறை தவிர்த்த ஒரு சாத்வீக போராட்டத்தின் வாயிலாக நாம் பெற்ற விடுதலையை, முழுச் சுதந்திரத்துடன் நாம் அனுபவிக்க முடியாமல் தடுப்பது... நம்முள் குடிகொண்டுள்ள வன்முறையே. ஜனநாயகம் குறித்த நமது தெளிவின்மையும், ஆழ்ந்த வேரூன்றியுள்ள வன்முறை உணர்வும்தான் சமூக ரீதியாக இன்று நாம் சந்தித்துவரும் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமாகிறது. நம்முள் உள்ள இந்த பலவீனத்தையே, வேறுபாட்டு உணர்வுகளையே மதவாத சக்திகள் பயன்படுத்திக்கொண்டு வன்முறையை - நமது மெளமான ஆதரவுடன் - நிறைவேற்றி வருகின்றன.

webdunia
இந்த வன்முறை உணர்விற்கு வேறாகயிருப்பது வெறுப்புணர்ச்சியே என்பதையும் மகாத்மா காந்தி அந்தப் பேச்சில் தெளிவுபடுத்தியுள்ளார். நமது விடுதலைப் போராட்டம் என்பது வெள்ளைய ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதுதானே தவிர, வெள்ளையர்களுக்கு எதிரானது அல்ல என்று கூறியுள்ளார்:

அடுத்தபடியாவெள்ளையர்களமீதாநமதமனப்பான்மகுறித்கேள்வி எழுகிறது. நமதமக்களிடையவெள்ளையர்களினமீதஒரவெறுப்புணர்ச்சி உள்ளதநானகவனித்துள்ளேன்.

அவர்களினநடத்தையாலதாங்களவெறுப்படைந்திருப்பதாகககூறுகின்றனர். வெள்ளைய (பிரிட்டிஷ்) ஏகாதிபத்தியத்தையும், வெள்ளையர்களையுமஅவர்களவேறுபடுத்திபபார்ப்பதில்லை. அவர்களுக்கஇரண்டுமஒன்றுதான். அவர்களிடமுள்இந்வெறுப்புணர்ச்சி ஜப்பானியர்களவரவேற்பதற்குக்கூகாரணமாகிவிடும். இதமிகவுமஆபத்தானது. ஒரஅடிமைத்தனத்திற்குபபதிலாமற்றொரஅடிமைத்தனத்திற்கஆளாக்கிவிடும். இந்வெறுப்புணர்ச்சியநாமதுறந்திவேண்டும். வெள்ளைஏகாதிபத்தியத்தியத்தோடுதானபோராடுகிறோம், வெள்ளையர்களோடநமக்கஎந்தததகராறுமஇல்லை. இந்தியாவினஆட்சி அதிகாரத்தவிட்டவெள்ளையர்களவிலகிக்கொள்வேண்டுமஎன்நமதகோரிக்கஅவர்களமீதாசினத்தினபார்பட்டதல்ல. இன்றநிலவுமசிக்கலாசூழ்நிலையிலஇந்தியஅதனபங்களிப்பசெவ்வனசெய்யவேண்டும். ஐக்கிநாடுகளநடத்திவருமஇந்தபபோரிலஇந்தியாவைபபோன்றதொரமாபெருமநாட்டிடமிருந்தவஞ்சகமாகவும், சூழ்ச்சியாகவுமபணத்தையும், பொருளையுமபெற்றுக்கொள்வதமகிழத்தக்நிலையல்ல. சுதந்திரமற்நிலையிலஎமதமக்களிடமிருந்தஉண்மையாதியாஉணர்வையும், வீரத்தையுமதட்டி எழுப்முடியாது. நாமமுழஅளவிற்கதியாகமசெய்யுமநிலையிலநமக்ககிடைக்கப்போகுமவிடுதலையவெள்ளைஅரசாலதடுத்துவிமுடியாது. எனவநம்மிடமுள்வெறுப்புணர்ச்சியமுழுமையாகததுறந்திவேண்டும். என்னைபபொறுத்தவரநானஒருபோதுமவெறுப்புணர்ச்சியஉணர்ந்ததில்லை ”.

webdunia
நம்மை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி, அராஜகத்தை ஏவி, ஏய்த்து சுரண்டித் தின்ற வெள்ளையர் ஆட்சியை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று தீர்மானமாக முடிவெடுத்து அதற்கான போராட்டத்தை அறிவித்த கணத்திலும் மகாத்மா கடைபிடித்த அந்த மனப்பான்மையே இன்று நமக்கு வழிகாட்டுகிறது.

ஆம், சாதி, மத ரீதியாக இன்று நடைபெற்றுவரும் வன்முறைக்கெல்லாம் மூலமாக உள்ளது இந்த வெறுப்புணர்வுதானே. அன்றைக்கு வந்து கொள்ளையடித்த மெகலாய அரசர்களின் நடவடிக்கைகளைக் காட்டி, அவர்களோடு எந்தச் சம்மந்தமும் இல்லாத இன்றைய முஸ்லீம்களை அல்லவா எதிரியாக சித்தரித்து நமது மெளனமா ஆதரவைப் பெறுகின்றன மதவாத சக்திகள். அந்த வெறுப்புணர்ச்சி அடிப்படையிலான வன்முறைக்கு ஆளான முஸ்லீம்களில் சிலர்தானே மத பயங்கரவாத சக்திகளின் பிடியில் சிக்கி, இன்று அப்பாவி மக்களின் உயிர்களுக்கு உலை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்?

கிறித்தவராக இருந்தாலும் நம்மவரே என்ற உணர்வற்ற காரணத்தினால்தானே வெறுப்புணர்ச்சியை வளர்த்துக்கொண்டோம்? மகாத்மா காந்தி கூறிய அந்த ஜனநாயக நாட்டில் அவர்களுக்கும் இடமுண்டே?

ஆக, தேசப்பிதா மகாத்மா காந்தி கூறிய அகிம்சை நெறியை ஆழ்ந்து படித்து உணர்ந்து மனதில் ஏற்றிக் கொள்ள தவறினோம். நம்மிடையே மத வன்முறையும், பயங்கரவாதமும் தலைவிரித்து ஆடுகின்றன.

webdunia
இவைகளுக்கு முடிவுகட்ட நாம் எடுக்கவேண்டியது அவர் காட்டிய நெறியைத்தான். கையிலெடுப்போம் அகிம்சையே. வேரறுப்போம் வெறுப்புணர்ச்சியை.

அந்த உரையை முடிக்கும்போது மகாத்மா காந்தி இவ்வாறு கூறியுள்ளார்:

எனது வாழ்வில் மிகப்பெரியதொரு போராட்டத்தை துவக்கப்போகும் இந்த தருணத்தில் எவர் மீதும் நான் வெறுப்புணர்வை வளர்த்துக்கொள்ள மாட்டே‌ன்.

அவர் வழி மட்டுமே நம் வழி. துவக்குவோம் போராட்டத்தை.

மகாத்மா காந்தி ஆற்றிய முழு உரை:

Share this Story:

Follow Webdunia tamil