கர்நாடக மாநிலத்தில் கிறித்தவர்கள் மீதும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் மீதும் கடந்த சில நாட்களாக நடந்துவரும் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும், சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் அறிவுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் அம்மாநில அரசிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.“கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுவரும் வன்முறையும், சொத்துக்கள் சூறையாடல் மற்றும் அழித்தலும் தடையற்று நடைபெற்று வருவதாகவும், அதனைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கவில்லை எனும் உணர்வும் உருவாகியுள்ளது. இந்திய அரசமைப்பும், இந்த நாட்டின் சட்டங்களும் மீறப்படுவதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலை நீடிக்க மத்திய அரசு அனுமதிக்காது” என்று கூறியுள்ள அந்த அறிவிக்கை, “வன்முறையை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை அனுப்புமாறு மாநில அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது” . |
ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஒரிசா மாநிலத்தில் இதே விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் இயக்கங்கள் காந்தமால் மாவட்டத்தில் தொடர்ந்து நடத்திய வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த அந்த மாநில அரசிற்கு அப்போதே இதேபோன்று ஒரு எச்சரிக்கை விடுக்காதது ஏன்? |
|
|
இந்த விவரத்தை தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் மதுகர் குப்தா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பத்திரிக்கைத் தகவல் வாரியத்தின் (பி.ஐ.பி.) இணையத் தளத்திலும் உள்துறை அமைச்சகம் அனுப்பிய அறிவிக்கையின் விவரம் அளிக்கப்பட்டுள்ளது.
(It has also generated a perception that adequate measures to bring the situation fully under control and effective action against those responsible for the violence, vandalism etc., are not being taken by the State Government. Coming in the wake of similar developments in some other States, this has caused widespread concern and apprehension besides being in breach of the Constitution and the law of the land. The Centre has stressed that this kind of situation cannot be allowed to continue.
The Home Ministry has asked for a detailed report about the situation and the action taken/proposed to be taken by the State Govt. in this regard, immediately.)
மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்திய அரசமைப்புப் பிரிவி 355ன் கீழ் எடுக்கப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு மதுகர் குப்தா பதிலளிக்க மறுத்துள்ளார். இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். ஏனெனில், மதுகர் குப்தா பதிலளிக்க மறுத்த காரணத்தினாலேயே, இது அரசமைப்புப் பிரிவு 355ன் கீழ்தான் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமாகிறது.
இப்படி, ஒரு மாநில அரசை அரசமைப்புப் பிரிவு 355ன் படி, எச்சரித்தப் பின்பும் அங்கு வன்முறை தொடருமானால், அதாவது கிறித்தவர்கள் மீது தாக்குதல் தொடருமானால், அரசமைப்புப் பிரிவு 356ன் கீழ் கர்நாடக அரசை மத்திய அரசால் கலைத்துவிட முடியும்.
எனவே, சிறுபான்மையினர் மீதான தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டியது கர்நாடக அரசின் அரசமைப்பு ரீதியான பொறுப்பாகிறது. அங்கு விஷ்வ இந்து பரிஷத்தும், பஜ்ரங் தளமும் நடத்திவரும் வன்முறைக்கு முடிவுகட்ட சரியான ஆயுதத்தையே மத்திய அரசு கையாண்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதே.
கர்நாடகத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை ஏற்பட்ட ஒரு சில நாட்களிலேயே இப்படியொரு எச்சரிக்கை விடுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம், ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஒரிசா மாநிலத்தில்
இதே விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் இயக்கங்கள் காந்தமால் மாவட்டத்தில் தொடர்ந்து நடத்திய வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த அந்த மாநில அரசிற்கு அப்போதே இதேபோன்று ஒரு எச்சரிக்கை விடுக்காதது ஏன்? |
மத்திய படைகளை அனுப்புமாறு கோரி, கிறித்தவ அமைப்பின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் அளவிற்கு நிலைமை சென்றது. ஆனால் அதுகுறித்த விவாதிக்க மத்திய அமைச்சரவை கூடவில்லையே, ஏன்? ஒரிசா மாநில அரசை இப்பொழுது எச்சரித்ததுபோல எச்சரிக்கவில்லையே, ஏன்? |
|
|
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று, விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த சுவாமி லட்சுமனானந்தாவும், மேலும் நான்கு பேரும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் காரணமாக்கி, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் யாரென்று முடிவாவதற்கு (அவர்களைக் கொன்றது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளே என்று வலிமையாக சந்தேகிக்கப்பட்டது) முன்னரே, வி.இ.ப. கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. கிறித்தவ வழிபாட்டுத் தலம் ஒன்று தீக்கீரையாக்கப்பட்டதில் சிக்கிய ஒரு கன்னியாஸ்திரியும் உயிரிழக்க நேர்ந்தது.
இதனைத் தொடர்ந்து காந்தமால் மாவட்டத்திலும், மற்ற இடங்களில்ம் கிறித்தவ வழிபாட்டுத் தலங்கள் பலவற்றை வி.இ.ப. ‘தொண்டர்கள்’ தீ வைத்துக் கொளுத்தினர். அடிப்படையற்று, ஆனால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த வன்முறையால் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமுற்றனர். வன்முறையை கட்டுப்படுத்த மத்தியப் படைகளை அனுப்புமாறு விடுத்த கோரிக்கையைக்குக் கூட மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
மத்திய படைகளை அனுப்புமாறு கோரி, கிறித்தவ அமைப்பின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் அளவிற்கு நிலைமை சென்றது. ஆனால் அதுகுறித்த விவாதிக்க மத்திய அமைச்சரவை கூடவில்லையே, ஏன்? ஒரிசா மாநில அரசை இப்பொழுது எச்சரித்ததுபோல எச்சரிக்கவில்லையே, ஏன்?
கர்நாடகத்திற்கு நேற்று எச்சரிக்கை, அதற்கு முதல் நாள்தான் ஒரிசாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது! மத்தியப் பிரதேசத்திலும் இதேபோன்று கிறித்தவ தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடந்ததால் அந்த மாநில அரசிற்கும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு விடுக்கும் எச்சரிக்கை, முன்பே விடுக்கப்பட்டிருந்தால், ஒரிசாவில் வன்முறை வெறியாட்டம் நின்றிருக்கும். எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். கர்நாடகத்தில் வனமுறை தலை தூக்கியிருக்காது. அது மத்தியப் பிரதேசத்திற்கும் சென்றிருக்காது.
இதுநாள்வரை இஸ்லாமியர்களை குறிவைத்து தனது இந்துத்துவா திட்டத்தை நிறைவேற்றிவந்த சங் பரிவார் இயக்கங்கள், தற்பொழுது கிறித்தவர்களை குறிவைத்து மதமோதலை நடத்திவருவது அவர்கள் முன்பே முடிவு செய்து நிறைவேற்றிவரும் ரகசியத் திட்டமே என்பதை இந்த இயக்கங்களின் மூலத்தை உணர்ந்தவர்கள் அறிவார்கள்.
ஆனால் மத்திய அரசு, பயங்கரவாதிகளின் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருப்பதைப் போல, இவர்களின் வன்முறை வெறியாட்டத்தை உடனடியாக தலையிட்டுத் தடுக்காமல் காலம் கடந்து செயல்பட்டிருப்பது அதன் நிர்வாக பலவீனத்தையே காட்டுகிறது.