உணவு பற்றாக்குறை முழுமையாக நிறைவு செய்யப்படாவிட்டால் இந்த நிலை ஆப்ரிக்க, ஆசிய நாடுகளை கடுமையாக பாதிக்கும் சூழல் உள்ளது. அப்படிப்பட்ட நிலை ஏற்படாமல் தடுக்க உடனடியாக 10 பில்லியன் டாலர் நிதி தேவை என்று ரோம் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சிறுவர் தொழிலாளர், சத்துணவு ஆகிய இரண்டு பிரச்சனைகள் மட்டுமின்றி, கல்வியின்மையும் அதிகரித்துவருகிறது. கற்க வேண்டிய வயதில் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்கள் காலம் முழுவதும் கல்வியற்றவர்களாக வாழும் நிலை ஏற்படுகிறது. ஒருபக்கம் கற்றோர் விகிதம் அதிகரித்தாலும், கற்க வேண்டிய வயதில் கல்வி மறுக்கப்படும் நிலையும் அதிகரித்துவருகிறது. இளம் வயதில் கல்வி மறுக்கப்படுவதால் அவர்கள் சிந்திக்கும் வயதில் அதற்குறிய திறனை பெறாதவர்களாகவே இருக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலை இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் இன்றளவும் நிலவுகிறது.ஆக, உலக அளவில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் நிலையை கவனமாக ஆராய்ந்து, பொருளாதார
ஏற்றத்தாழ்வுகளினால் அவர்களின் உடல், மன ரீதியிலான வளர்ச்சி பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு சத்துள்ள உணவையும், தூய்மையான சூழலையும், உரிய வயதில் கல்வியையும் உறுதி செய்ய வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும்.
ஏனெனில் இன்றைய குழந்தைகளும்,சிறுவர்களுமே நாளை எதிர்கால உலக சொத்துகள். அவர்களைக் காப்பாற்றவேண்டியது உலக நாடுகளின் ஒட்டுமொத்த பொறுப்பாகும்.
(இன்று (ஜூன் 12) சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்)