Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2007 : ‌நீ‌தி‌த்துறை ‌தீ‌விர‌ச் செய‌ல்பா‌ட்டி‌ன் ‌திரு‌ப்புமுனை!

2007 : ‌நீ‌தி‌த்துறை ‌தீ‌விர‌ச் செய‌ல்பா‌ட்டி‌ன் ‌திரு‌ப்புமுனை!
, வியாழன், 27 டிசம்பர் 2007 (18:18 IST)
webdunia photoFILE
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற 11 உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இருந்தே நமது நாட்டின் அரசியல் அமைப்பின் மூன்று தூண்களான நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித் துறை ஆகிவற்றிற்கிடையிலான விரிசல் அதிகமாகத் தொடங்கியது.

இந்த வழக்கை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில், தற்போதைய தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனும் இடம் பெற்றிருந்தார். இவ்வழக்கில் தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையிலான 4 நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற 11 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்துக்கு தான் அதிகாரம் உள்ளதாகத் தீர்ப்பு வழங்கினர்.

இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த ஒரு நீதிபதி மட்டும் வேறொரு தீர்ப்பை கூறியிருந்தார். இவ்வழக்கில் 4 நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்பில், அரசியல் அமைப்புச் சட்டமே உயர்ந்தது என்றும் நாடாளுமன்றம் அல்ல என்று கூறிய நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டவை தான் என்றும் தெரிவித்தனர். அதிலிருந்தே அரசியல் அமைப்பின் அங்கங்களான நீதித்துறை, நிர்வாகம், நாடாளுமன்றத்திற்கு இடையேயான மோதல் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, நாட்டின் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் நிர்வாகம், சட்டமன்ற, நாடாளுமன்ற அன்றாட பணிகளில் எல்லாம் உட்புகுந்து சீரமைக்கும் பணியை மேற்கொள்வதாக நினைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கியதை பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டி எடுத்துக் கூறலாம்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கின் போது நீதிபதிகள் ஏ.கே. மாத்தூர், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, நீதித்துறையில் பணியாற்றி வரும் நீதிபதிகள், தங்களின் வறையரைகளைத் தாண்டி செயல்படுவதாக கருத்து தெரிவித்தனர்.

அரசு நிர்வாகத்திலும், இதர அலுவலக நிர்வாகங்களிலும், நாடாளுமன்ற, சட்டமன்ற அதிகார வரையரைகளுக்கு உட்பட்ட பல துறைகளிலும் தலையிட்டு உத்தரவு பிறப்பித்தது அரசமைப்பு சட்டம் உறுதி செய்த சமநிலையை கெடுத்துவிடும் என்று எச்சரித்தனர். நீதிபதிகள் பேரரசர்களைப் போன்று நடந்து கொள்வதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர். இது உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளிடையே ஒரு விதமான அதிர்வலையை உருவாக்கியது.

இதனையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொதுநலன் வழக்குகளை விசாரிக்க மறுத்தனர். இதனால் நீதித்துறையில் குழப்பமான சூழ்நிலை நிலவியது. இப்பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உடனடியாக தலையிட்டு, சிக்கலான பொதுநலன் வழக்குகளை விசாரிக்கத் தேவையான நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து அந்த சர்ச்சை முடிவிற்கு வந்தது.

கடந்த ஆண்டு மத்திய அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 விழக்காடு இட ஒதுக்கீடு வழங்க எடுத்த முடிவை உச்ச நீதிமன்றம் ஆய்வுசெய்தது. 9 -வது அட்டவணையில் திருத்தங்கள் செய்து பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தையும் நிறுத்தி வைத்தது; டெல்லியில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களின் குடியிருப்புகளை அப்புறப்படுத்துவதில் முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக எழும்பிய குற்றச்சாற்று; சேதுசமுத்திர திட்டத்தை மறு ஆய்வு செய்யச் சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என பல வழக்குகளை மோதலுக்கு காரணமாக கூறலாம்.

நாடாளும‌ன்ற‌ம், ச‌ட்டம‌ன்ற‌ம் ஆ‌கியவை அர‌சிய‌ல் அமை‌ப்பு‌ச் ச‌ட்ட‌ம் கொடு‌த்து‌ள்ள அ‌திகார‌த்‌தி‌ன்படி நிறைவேற்றும் ச‌ட்ட‌ங்களஎ‌தி‌ர்‌த்து தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் பொதுநல‌ன் வழ‌க்குக‌ளை முழுவது‌ம் ‌விசா‌ரி‌த்து ‌தீ‌ர்‌ப்பு அ‌ளி‌க்கு‌ம் மு‌ன்னதாகவே, அ‌வ்வழ‌க்குக‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் உடனடியாக அ‌ச்ச‌ட்ட‌ங்களு‌க்கு‌ம், அரசு எடு‌க்கு‌ம் நடவடி‌க்கைகளு‌க்கும் தடை ‌வி‌தி‌ப்பது, ‌நிறு‌த்‌திவை‌ப்பது போ‌ன்ற செய‌ல்க‌ளி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் தொட‌ர்‌ந்து ஈடுப‌ட்டு வருவது‌ம், ம‌த்‌திய, மா‌நில அரசுக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட அர‌சி‌ன் ‌நி‌ர்வாக அமை‌ப்புக‌ளி‌ன் அ‌திகார வர‌ம்பு‌க்கு‌ள் உ‌ட்புகு‌ந்து உ‌த்தரவுக‌ள் மூல‌ம் ‌சில ப‌ணிகளை‌ச் செய‌ல்படு‌த்த முனைவது ‌நீ‌தி‌த்துறை‌யி‌ன் ‌மீது பொதும‌க்களு‌க்கு ச‌ந்தேக‌த்தை தூ‌ண்டுவதாக அமை‌ந்து‌ள்ளது.

webdunia
webdunia photoWD
இதுபோ‌ன்ற செய‌ல்க‌ள் ‌நீ‌தி‌த்துறை‌யி‌ல் உ‌ள்ளவ‌‌ர்க‌ளி‌ன் ஆள வே‌‌ண்டு‌‌ம் எ‌ன்ற மனோபாவ‌த்தை வெ‌ளி‌ப்படு‌த்துவதாக ஒரு கருத்தை ம‌க்க‌ளிடையே உருவா‌க்‌கியு‌ள்ளது. நமது அர‌சிய‌ல் அமை‌ப்பு‌ச் ச‌ட்ட‌ம் ‌நீ‌தி‌த்துறை, ‌நி‌ர்வாக‌‌ம், நாடாளும‌ன்ற‌ம் - ச‌ட்டம‌ன்ற‌ங்களு‌க்கு வழ‌ங்‌கியு‌ள்ள அ‌திகார வரையரைகளை முழுமையாக ‌நீ‌தி‌த்துறை பு‌ரி‌ந்து கொ‌ண்டு செய‌ல்ப‌ட்டாலேயொ‌ழிய த‌ற்போது ‌நிலவு‌ம் மோதலை த‌‌வி‌ர்‌க்க இயலாது என்பது அரசியலாளர்களின் கருத்தாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil