Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மன வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி குறைவு

மன வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி குறைவு

Webdunia

, புதன், 18 ஜூலை 2007 (15:37 IST)
பாரம்பரிய பழக்கவழக்கங்களிலிருந்து விலகி போனதால் நேர்ந்த விபரீதம்! ஜான் மில்லர் பேட்டி.

ஜான் மில்லர் - மனவளர்ச்சியற்ற மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரபல மருத்துவர். மனவளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியற்றவர்கள் பற்றிய நமது கேள்விகளுக்கு டாக்டரின் பதில்கள்.

கேள்வி! டாக்டர், இந்த மனவளர்ச்சி குன்றிய மற்றும் மூளை வளர்ச்சியில்லாமல் குழந்தைகள் பிறக்க என்ன காரணம்?

பதில் : பல காரணங்கள் உண்டு. நெருங்கிய உறவு முறையில் திருமணம், மற்றும் மூளைக்குள் செல்லும் இரத்த ஓட்டம் அடைவதால் மற்றும் மெதுவாக செயல்படுதல், சமச்சீரற்ற நிலை என்று கூட சொல்லலாம். இவை எல்லாம் உடல் ரீதியான காரணங்கள். பிறந்த பின்பு பல ஆண்டுகள் கூட மனவளர்ச்சியற்ற நிலைமை தெரிந்து கொள்வது மிகவும் சிரமம். சாதாரண சராசரி மனிதர்களை போலவே அவர்கள் இருப்பர்கள்.

ஆனால் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பழக்க வழக்கத்தில் வேறுபடுவார்கள். ஒரு இடத்தில் தொடர்ந்து ஐந்து நிமிடம் உட்கார முடியாத நிலை, பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் போர்டில் எழுதுவதை நோட்டில் காப்பி பண்ண முடியாத நிலை, இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத அல்லது தெரியாத நிலை.

இவையெல்லாம் அறிகுறிகள். உடனே அந்த பிள்ளைகளின் பெற்றோர் எங்களை போன்ற மருத்துவர்களை அணுகினால் படிப்படியான சிகிச்சைகள் மூலம் ஓரளவு குணப்படுத்த முடியும். தங்கள் சுய வேலைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு அவர்களை தயாரிக்க முடியும்.

மூளை வளர்ச்சி மற்றும் மனமுதிர்வு அடையாத நிலைக்கு உளவியல் காரணங்கள் என்று எடுத்துக் கொண்டால், பழமையான மற்றும் பாரம்பரிய விஷயங்களிலிருந்து நாம் தவறிவிட்டது தான். முன்பெல்லாம் கூட்டுக் குடும்பம் இருக்கும். தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என்று ஏராளமான உறவு முறைகள். குழந்தைகள் தூங்க தூளி (தொட்டில்) கட்டுவதுடன் தாலாட்டு பாடுவார்கள் தாய்மார்கள்.


இப்போதெல்லாம் இந்த தலைமுறையினருக்கு இல்லாமல் போய்விட்டது. இந்த கால குழந்தைகளுக்கு சரியான பராமரிப்பு இல்லை. டி.வி.யை மட்டும் தொடர்ந்து பார்க்க வேண்டிய நிலை. அதுவே நல்ல மன வளர்ச்சியை தடுத்துவிடும்.

"Intellectual Impairment" என்று சொல்லக் கூடிய விதமான நோயின் அறிகுறி உள்ளவர்களால் எதிலும் சரியான முடிவெடுக்க முடியாது, எதிலும் டி°டர்ப் ஆகக்கூடிய மனநிலை, இவற்றுக்கெல்லாம் நாங்கள் சிகிச்சை அளிக்கிறோம்.

கேள்வி : உங்கள் சிகிச்சை முறைகளை பற்றி சொல்லுங்கள்? பூரண பலன் அடைந்தவர்களை பற்றியும் கூறுங்கள்!

பதில் : நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், மனவளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியற்றவர்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தலாம். எந்த இயல்பான பழக்க வழக்கங்களும் தெரியாமல் புரிந்து கொள்ள முடியாமல் வருகின்ற குழந்தைகள் மற்றும் இளவயதுடையவர்களை ஓரளவு தங்கள் சம்பந்தப்பட்ட சுய வேலைகளை அவர்களே செய்துகொள்ளும் அளவுக்கு குணப்படுத்தி அனுப்பி வைக்கிறோம்.

கேள்வி : மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் சுமாராக எத்தனை பேர் இருப்பார்கள்?

பதில் : சென்னையில் மட்டும் இருபதிலிருந்து இருபத்தி ஐந்தாயிரம் குழந்தைகள் உள்ளனர்.

கேள்வி : இந்த குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சியற்றவர்கள் மீது அரசின் கவனம் எப்படியுள்ளது?

அரசின் கவனம் போதிய அளவு இல்லை என்று சொல்லலாம். குழந்தைகள் நிலையில் இவர்கள் இருக்கும்போது அவர்களை பராமரிக்க தாய் தந்தையர் உண்டு. இவர்களே பருவ நிலை அடையும் போது குறிப்பாக மன, மூளை வளர்ச்சியற்ற பெண்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே அரசு வயது வந்தோருக்கான காப்பகங்கள் அமைத்து இவர்களை காப்பாற்ற வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil