Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊனம் ஒரு குறையல்ல

ஊனம் ஒரு குறையல்ல

Webdunia

, புதன், 18 ஜூலை 2007 (15:36 IST)
வாழ்க்கையில் வெற்றி பெற துடிக்கும் எங்களுக்கு வழிகாட்டுங்கள், வாய்ப்பு தாருங்கள் !

ராஜிவ் ராஜனோடு ஒரு நேர்காணல

அரிது அரிது மானிடராதல் அரித
மானிடராயினும் கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது என்றார் ஒளவை.

அரிதாக பேசப்படும் மானிடப் பிறவியில் தான் எத்தனை தடைகள் ! இந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து சாதனை புரிகிறார்கள் சிலர்.

அந்த சிலர் தாங்கள் பிறப்பிலிருந்து எந்த ஊனமும் (உடலளவில்) இல்லாதவர்கள்.

ஊனமில்லாதவர்களில் பலரே தடைகளை தாண்ட முடியாமல், ஒடிந்து விழும்போது, உடற் குறையுடன் பிறந்து, மனவளர்ச்சியும் அற்ற நிலையில் உள்ளவர்கள் நடமாடுவதே சாதனை தான், அதிலும் ஒரு அமைப்பை நிறுவி தன் சக மனிதர்களை (உடல் குறையுடைய மனிதர்களை) வழி நடத்துவதும், ஆலோசனை வழங்குவதும், அதிகார வர்க்கத்தோடு கோரிக்கை வைத்து போராடுவதும் சாதாரண விஷயமல்ல.

உடல் ஊனமுள்ள நிலையில் பிறந்து, வளர்ந்து தன் முயற்சியால் படித்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒரு நல்ல மனிதரான திரு. ராஜீவ் ராஜனை வெப் உலகத்திற்காக சந்தித்தோம். அவரின் ஆழமான உணர்வுகளை பதிவு செய்து கொண்டோம்.

கேள்வி : உங்களை பற்றி சொல்லுங்கள்!

பதில் : உடல் குறையுடன் பிறந்தவன் நான். ஆனாலும் சிறு வயதிலிருந்தே எதையாவது செய்ய வேண்டும் என்று மனதில் எப்போதும் ஒரு நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் முடித்தேன். பின் பல பயிற்சி முகாம்களில் கலந்து கொன்டேன். ஊனமுற்றோரின் மறுவாழ்வு திட்டத்திற்கான படிப்பையும் முடித்தேன். என் படிப்பும், அறிவும், அனுபவமும் என்னைப் போன்ற உடல் குறையுடைய மக்களுக்கு பயன்பட வேண்டும் என எண்ணினேன். என்னை ஒரு அமைப்பின் கீழ் ஈடுபடுத்தி கொண்டு பணியாற்றி வருகிறேன்.


கேள்வி : உங்கள் அமைப்பை பற்றி சொல்லுங்கள்

பதில் : எங்கள் அமைப்பின் பெயர் டி°எபிலிட்டி லெஜி°லேஷன் யூனிட் (Disability Legislation Unit) புதுடில்லியை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளராக நான் (Co-ordinatior - South) பணி புரிந்து வருகிறேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் மொத்தம் நான்கு இடங்களில் எங்கள் மையம் உள்ளது. புதுடில்லி, புவன°வர், கௌஹாத்தி மற்றும் சென்னை. தென்னிந்தியாவில் ஐந்து பேர் கொண்ட ஒரு குழு உள்ளது. அதில் நான் ஒருங்கிணைப்பாளர், மற்றும் தனசேகர், °மிதா, மீனாட்சி, தீபா மற்றும் தேவி சக்ரவர்த்தி போன்றோர் பல பொறுப்புகளில் உள்ளனர்.

கேள்வி : உங்கள் அமைப்பின் நோக்கம் என்ன? நீங்கள் செய்யும் பணிகள் தான் என்ன?

பதில் : உடல் திறனற்றவர்களுக்கான பிரத்தியேக அமைப்பு தான் இது. அவர்களுக்கென எல்லா நிலையிலும் பயன்படக்கூடிய திட்டங்களை தொகுத்தல், சிறப்பு கவனம் மற்றும் கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துச் செ(h)ல்லுதல் போன்றவை முக்கிய பணிகள்.

ஆண்டுக்கு ஒரு முறை எங்கள் அமைப்புக்குள் கூட்டம் நடத்துவோம். கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம். எங்களுக்காக நாங்கள் ஏற்படுத்திய சட்ட உதவி மையமும் (Legal Aid Cell) உண்டு. அதில் மொத்தம் 26 வழக்கறிஞர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 12 பேர் இருக்கிறார்கள்.

கேள்வி : ஒரு அமைப்பாக ஏற்படுத்தி பணியாற்றி வருகிறீர்கள்! இன்னும் சரி செய்யப்படாத குறைகள் ஏதேனும் உண்டா?

பதில்: நிறையவே உண்டு. நாங்கள் முக்கியமாக கேட்பது, எங்களுக்கு கல்வி, நுழைவுரிமை (Access), விழிப்புணர்வு, வேலை வாய்ப்பு மற்றும் பிரத்தியேக சட்டங்கள், வழக்கம் போல் சில உரிமைகள் சட்ட புத்தகத்தில் மட்டும் இருக்கிறது. நடைமுறையில் நாங்கள் படும் அவதி சொல்லி மாளாது. குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டும், தமிழக அரசின் உடல் ஊனமுற்றோர்களுக்கான சிறப்பு ஆணையர் அலுவலகமே மூன்றாவது மாடியில் ஒரு காலத்தில் இயங்கியது. எங்கள் குறைகளை ஆணையரிடம் சொல்ல நாங்கள் மூன்று மாடி ஏறி செல்ல வேண்டும்.

நாங்கள் பல முறை மனு அளித்து போராடி தற்போது சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தரை தளத்திலேயே அலுவலகம் மாற்றப்பட்டது. அடிப்படையான ஒரு விஷயத்திற்கே இங்கு போராட வேண்டிய நிலை. எங்களுக்கு மிகப் பெரிய குறையே வழித்தடம் தான், பேருந்து, இரயில் எல்லாவற்றிலும் பிரச்சனை தான். வாக்குரிமை எங்களுக்கு உள்ளது. ஆனால் எங்கும் போவது பெரிய பிரச்சனை.

வெளி நாடுகளில் பல சிறப்பு வசதிகள் உண்டு. ஆனால் நம் நாட்டில் பொது போக்குவரத்தில் எங்களுக்கு எத்தனை பிரச்சனை. மா நகர போக்குவரத்து கழகத்தை எதிர்த்து ஒரு பொது நல வழக்கு கூட போட்டிருக்கிறோம். நடந்து கொண்டிருக்கிறது. வழித்தடம் தான் எங்களுக்கு பெரிய பிரச்சனை.


கேள்வி : உங்கள் குறைகளை அரசுக்கு எடுத்து வைத்திருக்கிறீர்களா?

பதில் : பல முறை சொல்லியிருக்கிறோம், எங்கள் அமைப்பின் சார்ப்பாக பல கருத்தரங்கங்கள் கூட்டங்கள் நடத்தி தீர்மானங்களை அனுப்பியிருக்கிறோம்.

கேள்வி : கல்வி, வேலை வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில் : இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் மூலம் மூன்று சட்டங்கள் எங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1978 -ஆம் ஆண்டு வந்த Rehabilitation Council of India Act 1995 - ஆம் ஆண்டு வந்த Protection of Rights for person with disability equal opportunity, 2000 - ம் ஆண்டு ஏற்பட்ட National Transport Act எல்லாம் எழுத்தில் மட்டுமே உள்ளது. வேலைவாய்ப்பை பொறுத்த வரை மூன்று விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதை முறையாக செயல்படுத்துவதில்லை. இப்போதுள்ள நிலவரப்படி அரசு பணிகள் 0.28 சதவீதம் தான் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல பணிகள் நிரப்பப்படாமல் உள்ளது.

தனியார் துறையை பொறுத்த வரை 0.5 சதவீதம் தான் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு வகையில் அநீதி தான். எங்களுக்கு உரிமைகள் உள்ளதாக சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் ... எங்களுக்கும் திறமைகள் உண்டு. அதை பல முறை நிரூபித்துள்ளோம். முறையான கல்வி வழங்கப்பட வேண்டும். எங்களுக்கு பிரச்சனைகள் அதிகம். இதுவரை "தீர்வுகள்" குறைவாக தான் நிகழ்ந்துள்ளது. இது ஒரு துரதிர்ஷ்டம் தான்.

கேள்வி : சுயதொழில் நீங்கள் துவங்குவதற்கு அரசு நிறைய உதவிகள் செய்வதாக அறிகிறோம்! நீங்கள் அதற்கு முயற்சி செய்யலாம் அல்லவா!

பதில் : நீங்கள் சொல்வதில் பாதி தான் உண்மை. எல்லாவற்றிலும் உள்ள நடைமுறை சிரமங்கள் இதிலும் உண்டு. மத்திய அரசின் பொறுப்பில் இயங்கி வரும் "National Handicapped Development Finance Corporation" (உ.பி. மா நிலம் நோய்டாவில் (Noida) உள்ளது) என்ற அமைப்பில் நாங்கள் கடன் கேட்டால் எங்களிடமே Collateral Security கேட்பார்கள், நாங்கள் எங்கே போவது? எங்களில் பெரும்பாலானோர் ஏழை எளியவர்கள் தான்.

கேள்வி : பொதுமக்களிடம் ஊனமுற்றோர் பற்றிய விழிப்புணர்வு எப்படியுள்ளது? எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில் : பொதுமக்கள் எங்களை அனுதாபத்தோடு பார்க்கிறார்கள். எங்களுக்கு அனுதாபம் தேவையில்லை, எங்களிடம் உள்ள திறமைகளை கண்டறியுங்கள். நீங்கள் கோபித்து கொள்ள கூடாது! நீங்கள் எந்த ஊனமோ குறையோ இல்லாமல் பிறந்தவர் தானே? உங்களால் எல்லா பணிகளையும் செய்துவிட முடியுமா? ஒரு காரியத்தை செய்ய முடியாததை தான் "Disable" என்கிறோம். அப்படி பார்த்தால் எல்லோரும் "டி°ஏபிள்" தான், யாரிடமும் குறையை மட்டும் பார்க்காதீர்கள் நிறையையும் பாருங்கள்.

ஊனம் இருந்தாலும் வெற்றி பெற துடிக்கும் எங்களுக்கு வழி காட்டுங்கள், வாய்ப்பு கொடுங்கள்!

ராஜீவ் ராஜனின் குரலில் மட்டும் தான் தடுமாற்றமிருக்கிறது. தடுமாறிய குரலில் தடுமாறாத தன்னம்பிக்கை ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படுகிறது. அவரின் துணிச்சலான சவாலான முயற்சிகளுக்கு "வாழ்த்து" தெரிவித்து விடை பெற்றோம் !


Share this Story:

Follow Webdunia tamil