Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்வியை கேலிக்கூத்தாக்கும் சுயநிதிக் கல்லூரிகள்!

கல்வியை கேலிக்கூத்தாக்கும் சுயநிதிக் கல்லூரிகள்!

Webdunia

, வியாழன், 5 ஜூலை 2007 (20:05 IST)
தமிழ்நாட்டிலஇயங்கிவருமசுயநிதி பொறியியல், மருத்துவககல்லூரிகளமாணாக்கர்களிடமவசூலித்தவருமகட்டணமும், மற்நன்கொடைகளுமஇன்றைக்கஅரசியலபிரச்சனையாக்கப்பட்டஆளுமகூட்டணிக்குளவிரிசலஏற்படுமஎன்றஎண்ணுமளவிற்கவிஸ்வரூபமஎடுத்துள்ளது!

tn.gov
சுயநிதி கல்லூரிகளினநிர்வாகங்களமாணவர்களிடமகல்விககட்டணமாகவும், கட்டநிதி, அந்நிதி, இந்நிதி என்றரசீதகொடுக்காமலஅடித்துவருமகொள்ளஊரறிந்உண்மையாஇருந்துவருமநிலையில், அதற்கஆதாரமஅளித்தாலநடவடிக்கஎடுப்போமஎன்றா.ம.க. தலைவரிடமஉயர்கல்வி அமைச்சரபொன்முடி கேட்டிருப்பதவிவரமதெரிந்அனைவருக்குமஆச்சரியத்தைதானஏற்படுத்தியிருக்கிறது.

சுயநிதி கல்லூரிகளஒவவொன்றிலுமபொறியியலபடிக்இவ்வளவு, மருத்துவமபடிக்இவ்வளவு, ஆளுமகல்வி கற்இவ்வளவஎன்றஒவ்வொரஆண்டுமபட்ஜெட்டிலஅறிவிப்புகளவெளியிடுவதபோல, வெளிப்படையாகவகூறி வசூலவியாபாரமசெய்தவருகின்றனர்.

இந்தனியாரகல்லூரியிலநன்கொடஎன்றோ, கூடுதலாகவஏதுமவசூலிப்பதஇல்லஎன்றகூறிடுமஅளவிற்கதமிழ்நாட்டிலமிகப் பெரும்பாலாசுயநிதி கல்லூரிகளஇல்லஎன்பதஉயரகல்வி அமைச்சரபொன்முடி புரிந்துகொள்வேண்டும்.

யதார்த்தத்தமறுத்துவிடுவதாலோ, ஆதாரமஇல்லஎன்பதாலநடந்தகொண்டிருக்கின்ஒரபகலகொள்ளஇல்லாமலஆகிவிடாது. பெற்றோர்களுக்கும், மாணாக்கர்களுக்குமவெள்ளிடமலையாகததெரியுமஒரஉண்மஅரசிற்கதெரியாதஎன்பதஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

அரசிற்கஆதாரவாதமிழதொலைக்காட்சி ஒன்றிலஒவ்வொரவாரமுமநடத்தப்படுமநேர்காணலநிகழ்ச்சியிலகலந்துகொண்டபேசிதமிழ்நாட்டினமுன்னணி கல்வியாளர்களிலஒருவரும், முன்னாளதுணவேந்தருமாஒருவர், "சென்னைக்கஅருகிலகல்லூரிகளநடத்திவருமதனியாரநிர்வாகமஒன்றஒவ்வொரஆண்டுமமாணாக்கரசேர்க்கையிலூ.30 கோடி வரவசூலித்தவருகிறது" என்றபட்டவர்த்தனமாகூறினார்.

சிமாதங்களுக்கமுன்பஇப்படிப்பட்சுயநிதி கல்லூரிகளநடத்தி வருவோரவீடுகளிலும், அலுவலகங்களிலுமவருமாவரித்துறையினரசோதனநடத்தி லட்சக்கணக்கிலரொக்கத்தையும், ஏராளமாசொத்தஆவணங்களையுமகைப்பற்றியுள்ளனர்.

உண்மை இவ்வாறிருக்க, தமிழ்நாட்டில் தொழில் கல்வியை முறைப்படுத்தி சீர்மைபடுத்தும் தனிப் பொறுப்பை ஏற்றுள்ள உயர் கல்வி அமைச்சர் ஆதாரம் கேட்பது நியாயமாகப்படவில்லை. உண்மையை சுலபமாகத் தெரிந்துகொள்ளும் அதிகாரத்தை வைத்துக் கொண்டு, மற்றவர்களை ஆதாரம் தருமாறு கேட்பது, தவறை மறைக்கும் அரசியலே தவிர, அதில் மக்கள் நலன் சற்றுமில்லை.

webdunia
சுயநிதிக் கல்லூரிகள் நடத்திவரும் கல்விக் கொள்ளைகளை ஏராளமானோர் எடுத்துக் கூறிவிட்டனர். கடைசியாகக் கூறுபவர்தான் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கல்வியை காப்பாற்ற வேண்டும்!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உயர் கல்வி தனியாரிடம் சிக்கி அல்லல்பட்டு வருகிறது. கல்வி இன்றைக்கு மிகப்பெரிய வியாபாரமாக நடந்து வருகிறது. அப்பட்டமான பகல் கொள்ளை அதிகாரப்பூர்வமாக நடந்து வருகிறது. யார் தடுப்பது? உயர் கல்வியை காப்பாற்றப் போவது யார்?

இன்றைய நிலை தொடர்ந்தால் கல்விக்கு மதிப்பேதும் இராது. ஒருபக்கம் சமூகத்தின் அனைத்து தட்டு மாணாக்கர்களுக்கும் உயர் கல்வி கிட்ட வேண்டும் என்பதற்காக சமூக நீதியை சட்டப்பூர்வமாக்கி நடைமுறைப்படுத்த ஒரு சட்டப் போராட்டமே நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், மற்றொருபுறம் உயர் கல்வி வணிகமாகிக்கொண்டே போவதை அனுமதிப்பது ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட செயலாகும்.

சமூக நீதியை நடைமுறைப்படுத்தி உயர் கல்வியை அனைத்து சமூகத்தினரும் பெற்றிட பாடுபடும் மத்திய, மாநில அரசுகள், அதே உயர் கல்வி தனியாரிடம் சிக்கி கொள்ளைக் கருவியாக்கப்படுவதை தடுத்து நிறுத்த தயங்குவது ஏன்? இந்தக் கேள்விக்கு செயல் ரீதியாக பதிலளிக்க வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு இவ்வளவுதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு நிர்ணயித்தது. ஆனால், அதை எந்த சுயநிதிக் கல்லூரியும் கடைபிடிக்கவில்லை என்கின்ற உண்மை தெரியும்போது, அரசின் கட்டளைகள் கடைபிடிக்கப்படாததற்கு காரணம் என்ன? என்ற கேள்வியும் எழுகிறது.

உயர் கல்வி மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக கல்வியை தனியாரின் பிடியில் இருந்து மீட்டு அரசாங்கமே அனைத்து கல்வி நிலையங்களையும் ஒவ்வொன்றிற்கும் தேவைப்படும் தரத்துடன் உருவாக்கி கல்வியின் தரத்தைக் காப்பாற்ற வேண்டும். அந்த இலக்கை நோக்கி மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.

முதற்கட்டமாக சுயநிதி கல்லூரிகளில் ஒவ்வொரு படிப்பிற்கும் அரசு நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறதா என்பதனை அரசு கடுமையாக கண்காணிக்க வேண்டும். முறை தவறி செயல்படும் 10, 15 கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்து மற்ற கல்லூரிகளுக்கு அதிர்ச்சியைத் தரவேண்டும்.

தமிழக அரசு இப்பிரச்சனையை அரசியல் கண்ணோட்டத்துடன் நோக்காமல் சமூக, கல்வி நோக்குடன் பார்த்து செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் இது மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அரசாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil