Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைதியை காக்க அழித்தே தீரவேண்டும்!

அமைதியை காக்க அழித்தே தீரவேண்டும்!

Webdunia

ஜம்மு-காஷ்மீரில் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் பாகிஸ்தான் உருவாக்கிவரும் பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை முற்றிலுமாக தடுக்கவேண்டுமெனில், இந்திய எல்லைக்கு அப்பால் ஐ.எஸ்.ஐ. இயக்கிவரும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழித்தே தீரவேண்டும்!

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு அம்மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்தத் துவங்கிய வன்முறை அராஜகம் தடையற்று தொடர்ந்து வருகிறது. நமது எல்லையையும், ஜம்மு-காஷ்மீர் மக்களையும் பாதுகாத்துவரும் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி பல நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளின் இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு பலியாகியுள்ளனர்.

அவர்கள் நடத்திய கடைசி வெறியாட்டம் நந்திமார்க் கிராமத்தில் வாழ்ந்துவந்த 24 காஷ்மீரி பண்டிதர்களை பலிகொண்டுள்ளது. இது தொடரும் என்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள லஸ்கர்-ஈ-தயீபா இயக்கத்தை துவக்கிய அஃபீஸ் சயீத் கூறியுள்ளான்.

இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியுள்ள அஃபீஸ் சயீத், காஷ்மீர் பிரச்சனைக்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் தீர்வு காணமுடியாது என்றும், ஜிகாத் (புனிதப் போர்) வாயிலாகவே காஷ்மீரை வெல்லவேண்டும் என்றும் கூறியுள்ளான்.

இந்தியாவை பழிக்குப் பழி வாங்கவேண்டும். அவர்கள் நமக்கு புகட்டிய பாடத்தை அதே வகையில் திருப்பிப் புகட்டவேண்டும். காஷ்மீரில் உள்ள முஸ்லீம்களை அவர்கள் கொன்றது (?) போல இந்துக்களை கொல்லவேண்டும் என்று வெறியுடன் பேசியுள்ளான். அவனுடைய பேச்சு நிசமாவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவது போல, இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் பெருகிவரும் பயங்கரவாத முகாம்களின் பட்டியல் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது.

எல்லைக்கு அப்பால் இயங்கும் 140 பயங்கரவாத முகாம்கள்!

இந்திய-பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லைக்கு அருகிலும், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகிலும் பயங்கரவாதிகளை உருவாக்கும் 140 பயிற்சி முகாம்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நடத்தி வருகிறது!

இந்த 140 பயிற்சி முகாம்களிலும் தற்பொழுது 3,500-க்கும் அதிகமான அந்நிய பயங்கரவாதிகள் பயிற்சி எடுத்து வருவதாகவும், சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது காஷ்மீருக்கும் ஊடுருவி தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாகவும் உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முகாம்களில் பயிற்சி பெறும் பயங்கரவாதிகளுக்கு அதிநவீன துப்பாக்கிகள், ராக்கெட்டுகள், நவீன கண்ணி வெடிகள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இந்த பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

ஐ.எஸ்.ஐ. நடத்திவரும் இந்த பயிற்சி முகாம்களில்தான் லஸ்கர்-ஈ-தயீபா, ஜமாயீத்-ஈ-முஜாஹிதீன், அல் பாதர், ஹர்கத் உல் முஜாஹிதீன், ஹர்கத் உல் ஜிகாதி இஸ்லாமி, ஜெய்ஸ்-ஈ-மொஹம்மது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத இயக்கங்களின் தொண்டர்கள் பயிற்சி எடுத்து வருவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்திலேயே - பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில்தான் பெரும்பாலான பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

உதாரணத்திற்கு, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியின் தலைநகரான முசாஃபராபாத் நகருக்கு அருகில் மட்டும் 23 முகாம்கள் இயங்கி வருகின்றன. அவைகளில் 350 முதல் 450 பேர் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

வடக்கு முசாஃபராபாத்தில் உள்ள ஜங்கல் பங்கல், மோர், பிர் சின்னாசி, கோரி ஆகிய இடங்களில் 5 முகாம்களும், அதன் மேற்குப் பகுதியில் உள்ள காரி ஹபிஃபுல்லா, உத்தர்ஷிஷ் மற்றும் முவாஸ்கர் யீ அஸ்கா ஆகிய இடங்களில் 4 முகாம்களும் இயங்கி வருகின்றன.

முசாஃபராபாத்தின் தென் பகுதியில் உள்ள நாசிரி, சேனேரி, போய், லோஹார் காலி , டோமல், கோட் ஜெய்மான் ஆகிய இடங்களில் 5 முகாம்களும் இயங்கி வருகின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லை மாவட்டமான ரஜௌரியில் இருந்து 5 கி.மீ. முதல் 30 கி.மீ. தூரம் வரை 16 முகாம்கள் இயங்கி வருகின்றன. கோட்லி, சென்சா, நிக்கியால், குய்ராட்டா ஆகிய இடங்களில் இயங்கிவரும் இம்முகாம்களில் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் பயிற்சி பெறுகின்றனர்.

பூஞ்ச் மாவட்ட எல்லையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள லாஞ்சோத், அசீரா, பலந்தாரி, ராவ்லாகோட், கஹுட்டா ஆகிய இடங்களில் இயங்கிவரும் 20 பயிற்சி முகாம்களில் 250-லிருந்து 300 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

அலியாபாத் எனும் இடத்தில் 9 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் உள்ளன. இவ்விடம் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.

யூரி பகுதிக்கு மேற்கில் உள்ள ஷாரியான், ரேஷியான் மற்றும் சக்கோட்டி ஆகிய இடங்களில் 4 முகாம்களும், நௌஷாரா பகுதிக்கு அருகில் உள்ள சமானி, பிம்பர், மங்ளா ஆகிய இடங்களில் 12 முகாம்களும் இயங்கி வருகின்றன. இவைகளில் 400-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

ஜம்முவை ஒட்டிய சர்வதேச எல்லைக்கோட்டிற்கு அப்பால் உள்ள சாம்ப், புட்வால், சியால்கோட் ஆகிய இடங்களில் 7 முகாம்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சியால்கோட்டில் இயங்குவரும் முகாமை ஐ.எஸ்.ஐ.யின் அதிகாரியான மேஜர் கீனி கண்காணித்து வருகிறார்.

குர்தாஸ்பூருக்கு அருகில் உள்ள முர்டைக் எனும் இடத்தில் மிக பெரிய பயிற்சி முகாம் உள்ளது. சர்வதேச எல்லையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் இயங்கிவரும் இந்த முகாமில் மட்டும் 250 லஸ்கர் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். லஸ்கர் இயக்கத்தின் தலைமையிடம் இதுதான் என்று கூறப்படுகிறது.

குப்வாரா மாவட்டத்திற்கு எதிரே மன்ஷேரா எனும் இடத்தில் 5 முகாம்களும், கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள நௌகோட்-லீப்பா பள்ளத்தாக்கில் உள்ள 6 முகாம்களும் இயங்கி வருகின்றன. சூரா அத்துமான் என்ற இடத்தில் 7 முகாம்களும், டீட்வால் எனும் இடத்தில் 6 முகாம்களும் இயங்கி வருகின்றன. இவைகளில் 160 முதல் 170 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

துந்தியால் எனும் இடத்தில் 7 முகாம்களும், கெல் எனும் இடத்தில் 2 முகாம்களும் உள்ளன. இவைகளில் 150 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும், நீலம் நதிக்கு எதிரில் உள்ள கேரான் எனும் இடத்தில் 3 முகாம்களும் இயங்கி வருகின்றன.

மேற்கூறப்பட்ட முகாம்களில் தீவிர பயிற்சி பெற்றுவரும் பயங்கரவாதிகள் வரும் கோடைக் காலத்தில் ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த முகாம்கள் ராணுவ ரீதியில் அழிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டதால்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கும், இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் முழுமையாக விலகும் என்றும், இல்லையேல் இந்த ஆண்டில் பயங்கரவாதிகளின் வன்முறை கடுமையாக உயரும் ஆபத்து உள்ளதென்றும் கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளால் (பாகிஸ்தானால்) ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை எவ்வாறு தடுக்கப்போகிறது மத்திய அரசு?

Share this Story:

Follow Webdunia tamil