Newsworld News Climateconference 0912 05 1091205088_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோபன் ஹேகன் வானிலை மாற்ற மாநாடு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

Advertiesment
கோபன் ஹேகன்
, சனி, 5 டிசம்பர் 2009 (20:05 IST)
டிசம்பர் 7ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை டென்மார்க் தலைநகர் கோபனஹேகனில் புவி வெப்பமடைதலின் விளைவாக ஏற்பட்டு வரும் வானிலை மாற்றங்கள் குறித்த மாநாடு நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விவாதிக்கின்றனர்.

வெப்ப வாயு (கரியமில வாயு, மீத்தேன் உள்ளிட்ட) வெளியேற்றத்தில் வளர்ந்த நாடுகள் மட்டுமே பெரும்பங்கு வெப்ப வாயுக்களை வெளியேற்றி வருவதாலஅந்த நாடுகள் சுற்றுச்சூழலை நாசம் செய்யும் பல்வேறு கனரக தொழில் நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டு, வெப்ப வாயு வெளியேற்றத்தை பெருமளவு குறைக்கவேண்டும் என்று இதற்கு முன்னால் நடைபெற்ற கியோட்டோ (ஜப்பான்) மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் அதனை செயல்படுத்த ஒத்துழைப்பு தருவதில் அமெரிக்கா கடுமையான மறுப்புகளை தெரிவித்து வருகிறது. பிரான்ஸ், ஹங்கேரி, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளின் அயலுறவு அமைச்சர்கள் அமெரிக்காவிற்கு கடுமையான அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே கூறிவருகின்றனர். இந்த நிலையில் தீர்மானமான, தீவிரமாக நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பந்தத்தை இந்த முறை கையெழுத்திட அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு வளரும் நாடுகள் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மட்டுமின்றி புவி வெப்பமடைதல் என்ற உண்மையை பல்வேறு நிறுவனம் சார்ந்த விஞ்ஞானிகளை வைத்து மறைத்தும், மறுத்தும் வரும் ஒரு போக்கிற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதாலும் கோபன்ஹேகன் மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

வளரும் நாடுகளுக்கும், வளர்ந்த நாடுகளுக்கும் இடையிலான ஒரு பெரிய பிளவு இந்த வானிலை மாற்ற விவகாரத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் கோபன்ஹேகன் மாநாட்டை உலகத் தலைவர்கள் எதிர்நோக்குகின்றனர்.

வளரும் நாடுகள் தங்கள் வெப்ப வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று வளரும் நாடுகள் நிர்பந்தப்படுத்தி வரும் நிலையில் உண்மை என்னவெனில்,அமெரிக்காவின் தனி நபர் வெப்பவாயு வெளியேற்ற விகிதத்தை ஒப்பு நோக்கும் போது இந்தியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகளின் தனி நபர் வெப்ப வாயு வெளியேற்றம் 20இல் ஒரு பங்கு என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வானிலை மாற்றங்களினால், கடல் நீர்மட்டம் உயர்தல், பனிமலைகள் உருகுதல், துருவப் பனிப்படலங்கள் முற்றிலும் அழிதல், பருவம் தவறிய மழை, பெரும் புயல்கள், தொடர்ந்த வெப்பநிலை உயர்வு ஆகியவற்றின் விளைவுகளான பஞ்சம், குடிநீர் பற்றாக்குறை, உலகளாவிய உணவுப் பற்றாக்குறை, விவசாயம் முற்றிலும் அழிதல் போன்றவையால் அதிகம் பாதிக்கப்படப்போவது உலகின் ஏழை நாடுகளே என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எதுவும் இருக்க நியாயமில்லை.

வானிலை மாற்ற உண்மைகளும் புள்ளி விவரங்களும

1. 1850ஆம் ஆண்டிலிருந்து, அதாவது புவி வெப்ப நிலை கணக்கீடு துவங்கிய ஆண்டு முதல் 12 ஆண்டுகள் மிகவும் வெப்பமான ஆண்டுகளாக இருந்துள்ளது.

2. 19ஆம் நூற்றாண்டின் பிந்தைய இரண்டாம் பாதி முதல் புவி வெப்பமஆண்டிற்கு 0.76 டிகிரி அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் அதிகரித்து வரும் புவி வெப்பம் அதற்கு முந்தைய 100 ஆண்டுகளின் அதிகரிப்பைக் காட்டிலும் இரு மடங்காகியுள்ளது. இன்றே உலகம் முழுதும் வெப்ப வாயு வெளியேற்றத்தை நிறுத்தினாலும், வான்வெளி மாறா நிலை (Atmospheric Inertia) காரணமாக வெப்பம் அதிகரிக்கும். அதாவது அந்த அளவுக்கு இது வரை வானிலை மாற்றங்களை ஏற்ப்டுத்தியுள்ளோம்.

3. 1750ஆம் ஆண்டு முதல் வான்வெளி கரியமிலவாயு அடைவு 35%ஆக அதிகரித்துள்ளது. உலக பனிச்சிகரங்களின் பனி அளவின் மீது மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில் இது நிறுவப்பட்டுள்ளது.

4. கடல்களில் 3000 மீ ஆழம் வரை சராசரி நீர் வெப்ப நிலை அதிகரித்துள்ளது. 80 சதவீத வெப்ப அதிகரிப்பை கடல் தனக்குள் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் வெப்ப நிலை அதிகரித்து, கடல் நீர்மட்ட உயர்வை தீவிரப்படுத்துகிறது.

5. தற்போது கடல் நீர்மட்டம் உலகம் முழுதும் ஆண்டொன்றிற்கு 3ி.ீ. அளவு உயர்ந்து வருகிறது. 20ஆம் நூற்றாண்டில் மட்டும் 17ெ.மீ கடல் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. 1961 முதல் 2003ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட கடல் நீர்மட்ட உயர்வு 1993- 2003 காலக் கட்டத்தில் 42% வேகமடைந்துள்ளது.

6. வட துருவத்தின் கடந்த 50 ஆண்டுகால சராசரி வெப்ப அளவு கடந்த 500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

7. ஆர்டிக் பிரதேசத்தில் 1978ஆம் ஆண்டிற்கு பிறகு கடல் பனிப் படலம் 8% அழிந்துள்ளது. கோடைக்காலங்களில் 22% பனிப்படலங்கள் உருகிவருகின்றன.

8. புவி வெப்பமடைதல் மற்றும் கடல் நீர் வெப்பமடைதல், பனி அழிவு ஆகியவை புவி வெப்பமடைதல் என்ற ஒன்று இயற்கையாக நிகழ்வது என்ற கோட்பாட்டை மறுத்து மனித நடவடிக்கைகளால் தாக்கம் பெறுவது என்ற உண்மையை எடுத்துக்காட்டுகிறது.

9. 1990ஆம் ஆண்டு முதல் 2100 ஆம் ஆண்டிற்குள் கடல் நீர் மட்டம் 18 ெ.மீ முதல் 59 ெ.மீ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10. வெப்ப அலைகள், பஞ்சம், கடுமையான மழை, ஆகியவை அடிக்கடி ஏற்படுவதோடு, புயற்காற்று அதி தீவிரமடைவதும் நிகழும்.

விளைவுகள் என்ன?

உணவு: உலகம் முழுவதும் பயிர் விளைச்சலில் கடும் பாதிப்பு.

நீர் ஆதாரம்: சிறிய பனிமலைகள் முழுதும் உருகிவிடும். பல இடங்கலில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும். வட இந்தியா, திபெத், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும், மத்தியத் தரைக் கடல் நாடுகள், தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் நீர் ஆதாரங்கள் வற்றி விடும் அபாயம். கடல் நீர் மட்ட உயர்வால் முக்கிய நகரங்கள் பாதிப்படையும்.

சுற்றுச்சூழல் ஒழுங்கமைப்புகள்: பவளப்பாறைகளுக்கு ஏற்படும் தீவிர பாதிப்பு. உயிர்ப் ப்ரவலை பாதுகாக்கும் முக்கிய உயிரிகளின் அழிவு அதிகரிக்கும்.

தட்பவெப்ப நிலைகளில் எதிர்பாராத திடுக்கிடும் மாற்றங்கள்: புயற்காற்றின் தீவிரம் அதிகரிக்கும். காட்டுத்தீயின் அதிகரிப்பு, வறட்சி, வெள்ளம், வெப்ப அலைகள்.

மேலும் கண்ணுக்கு புலப்படாத சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஏற்படுத்தும் இனம்புரியாத தீமை விளைவுகள்.

இத்தகைய மோசமான விளைவுகளை வளரும் நாடுகள் எழை நாடுகள் மீது திணித்து வருகிறது. ஒரு காலத்தில் அடிமை வியாபாரம், காலனியாதிக்கத்தின் மூலம் பலவீனமான மற்ற நாடுகளின் வளங்களைச் சுரண்டி "முன்னேற்றம்" கண்ட இந்த வளரும் நாடுகள், தங்கள் அடைந்த முன்னேற்றத்தினால் ஏற்படுத்திய புவி மைவிளைவுகளினால் மற்ற நாடுகளை மேலும் மோசமான நிலைக்கு தள்ள ஆயத்தமாகிவருகின்றன.

வளரும் நாடுகளும், தேச-அரசுகளும் Sustainable Growth என்று கூறும்போது பூமியைப் பாதுகாக்கும் பொருளாதார வளர்ச்சியா அல்லது பொருளாதாரத்தை மட்டும் பாதுகாக்கும் வளர்ச்சியா என்பதில் இருண்மை உள்ளது. நமக்கு அழிக்க உரிமையல்லாத ஒன்றை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க ஒப்பந்தமா அல்லது உண்மையில் பூமியை அதன் அனைத்து உயிரினங்கள் பொருட்கள் ஆகியவற்றுடன் பாதுகாப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமா என்பதெல்லாம் இந்த மாநாடு முடிந்தவுடன் தெரியும்.

ஆனால் எந்த ஒரு ஒப்பந்தமும் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மேலும் மோசமடையத்தான் அதிக வாய்ப்பு என்று உலகின் புகழ் பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஜேம்ஸ் ஹான்சன் கூறுகிறார்.

வளரும் நாடுகளிடம் பசுமை தொழில் நுட்பம் உள்ளது, எனவே கார்பன் தொழில்நுட்பச் சந்தைகளை உருவாக்கி வளரும் நாடுகளுக்கு விற்று பிழைப்பைத் தொடர வேண்டியதுதான், வளரும் நாடுகளும் வளர பணம் வேண்டாமா? என்றெல்லாம் கடும் ஐயங்களை ஒரு இருண்ட நகைச்சுவையுடன் அவர் கூறிவருகிறர்.

அதாவது புவி வெப்பமடைதலின் விளைவுகளை உலக நாடுகள் தீவிர நிலையில் உணரவேண்டுமென்றால் அது இவ்வாறான ஒப்பந்தங்களாக இருக்காது. என்று கூறும் ஹான்சன், நிலைமையின் தீவிரத்தை வரலாற்றின் வேறு ஒரு காலக்கட்டத்துடன் தொடர்பு படுத்திக் காட்டியுள்ளார்.

அதாவது அடிமைமுறையை ஒழிப்பது, நாஜிகளை ஒடுக்குவது போன்ற விவகாரம் போல்தான் இதன் தீவிரமும் இருக்கவேண்டும், இதில் நாம் ஒரு போதும் சமரசத்திற்கு ஒப்புக் கொள்ளக்கூடாது.

அதாவது அடிமை முறையை முதலில் நாம் 50% ஒழிப்போம், அல்லது 40% ஒழிப்போம் என்றெல்லாம் பேச முடியுமா? அது போல்தான் வெப்ப வாயு வெளியேற்றமும். இதில் அனைவரும் ஒன்று கூடி ஒவ்வொரு நாடும் குறைக்கும் அளவை வெளியிடுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்று கூறுவது போல் உள்ளது ஹான்சனின் தீவிர நிலைப்பாடு.

சுற்றுச்சூழல் விவகாரம், பூமிக்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சரியாக புரிந்து கொண்டு, உணமையில் என்செய்யப்படவேண்டும் என்பதைக் கூறும் ஒரு தலைமை இல்லை, பதிலாக நாம் வர்த்தகத்தை தொடரத் தலைப்படுகிறோம் என்று ஹான்சன் கூறுவது நிலவரத்தின் உண்மையை நமக்கு உணர்த்துவதாய் உள்ளது..

ஆனால் அவர் எதிர்மறை சிந்தனாவாதி அல்ல. மாறாக அவர் புவி வெப்பமடைதலை தடுக்க ஏதாவது செய்தாகவேண்டும் என்பதிலும் தீவிரம் காட்டுகிறார்.

நிலக்கரிச் சுரங்கங்கள்தான் கரியமில வாயு வெளியேற்றத்தில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறது. ஹான்சன் நிலக்கரித் தொழிற்துறையை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்.

எனவே இத்தகைய சுற்றுச்சுழல் நெருக்கடி (இந்த வார்த்தைகூட போதாதுதான்!) நிலையில் கோபன் ஹேகன் மாநாடு திங்களன்று துவங்குகிறது.

பூமியை தேச அரசுகள் கைவிட்டுவிட முடிவெடுக்குமா, அல்லது அல்லது சேதங்களை குறைக்க முடிவெடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil