வானிலை மாற்றம் : வழிகாட்டு ஒப்பந்தம் உருவாகும் - பான் கீ மூன்
, சனி, 5 டிசம்பர் 2009 (19:46 IST)
கோபன்ஹேகனி்ல் நடைபெறவுள்ள வானிலை மாற்றத்திற்கான மாநாட்டில் புவி வெப்பமடைதலைத் தடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் அலுவலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மாற்றத்திற்கான ஐ.நா.அமைப்பின் தலைவர் யானோஸ் பாஸ்டர், “புவி வெப்பமடைதலால் ஏற்படும் எதிர் விளைவுகளைத் தடுத்து நிறுத்த அனைத்து நாடுகளையும் சட்டப் பூர்வமாகக் கட்டுப்படுத்தத் கூடிய ஒரு வழிகாட்டுதல் ஒப்பந்தம் கோபன்ஹேகன் மாநாட்டில் நிச்சயம் உருவாகும் என்பதில் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் நம்பிக்கையுடன் உள்ளார்” என்று கூறியுள்ளார்,புவி வெப்பமடைதலைத் தடுத்து நிறுத்தக் கூடிய கூட்டு நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளின் தலைவர்களுடன் பான் கீ மூன் தொடர்ந்து பேசி வருவதாகவும், கோபன்ஹேகனில் அது தொடர்பாக வழிகாட்டு ஒப்பந்தம் உருவாக வேண்டு்ம் என்பதில் உலகத் தலைவர்களும் உறுதியாக உள்ளதாகவும் யானோஸ் பாஸ்டர் கூறியுள்ளார்.