அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 5 பைசா குறைந்தது.
காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் ரூ. 42.90/42.92 என்ற அளவில் இருந்தது.
காலை பங்குச் சந்தை ஆரம்பிக்கும் போது குறியீட்டு எண்கள் உயர்ந்தன. அத்துடன் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ. 42.88/42.89 என்ற விலையில் விற்பனையானது.
இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 6 பைசா குறைவு.
வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 42.94/42.95.