அந்நியச் செலவாணி சந்தையில் இன்றைய காலை வர்த்தகத்தில் 1 டாலர் ரூ.42.82 / 42.83 என்ற அளவில் இருந்தது.
இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 4 பைசா குறைவு.
நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 42.86/42.87.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்ததாலும், பங்குச் சந்தையின் குறியீட்டு எண் குறைந்ததால் டாலரின் மதிப்பு குறைந்து ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
1 டாலர் ரூ.43க்கும் அதிகமாக உயராது என்று கருதுவதால் ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை செய்கின்றனர். அத்துடன் ரிசர்வ் வங்கி தலையிட்டு இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதை தடுக்கும் என்பதால் ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை செய்கின்றனர்.