அந்நியச் செலவாணி சந்தையில் காலை வர்த்தகம் நடக்கும் போது 1 டாலார் ரூ. 42.93 / 42.94 என்ற அளவில் இருந்தது.
இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 3 பைசா குறைவு.
நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 42.96 / 42.97.
பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகரித்ததாலும், ரிசர்வ் வங்கி தலையிடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அத்துடன் வங்கிகளும், தொழில் வர்த்தக நிறுவனங்களுடம் டாலரை விற்பனை செய்தனர். இதனால் ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 131.31 டாலராக குறைந்தது.