வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 8 பைசா குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.42.52 / 42.53 ஆக இருந்தது.
நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.42.60 / 42.61.
வங்கிகள் டாலரை அதிக அளவு விற்பனை செய்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய்க்கு 10 டாலர் குறைந்தது. ஆசிய நாட்டு சந்தைக்கான 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 124 டாலராக குறைந்தது. கடந்த சில நாட்களுக்கு இது வரைக்கும் இல்லாத அளவாக 1 பீப்பாய் 135 டாலராக அதிகரித்து நினைவிருக்கலாம்.