Newsworld News Business 0806 04 1080604013_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா-துபாய் வர்த்தகம் 74% உயர்வு!

Advertiesment
இந்தியா துபாய் வர்த்தகம்
, புதன், 4 ஜூன் 2008 (12:51 IST)
இந்தியாவுக்கும் துபாய் நாட்டிற்கும் இடையிலான வர்த்தகம் சென்ற ஆண்டு 74 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பெட்ரோலிய கச்சா எண்ணெய் இல்லாத மற்ற பொருட்களின் வர்த்தகம் 2006ஆம் ஆண்டில் 10.9 பில்லியன் அமெரிக்க டாலர் (40 பில்லியன் தினார்) அளவிற்கு வர்த்தகம் நடந்தது. இது சென்ற ஆண்டு 74 விழுக்காடு உயர்ந்து 19 பில்லியன் டாலராக (69.7 பில்லியன் தினார்) அதிகரித்துள்ளது.

இது பற்றி துபாயில் உள்ள இந்திய தூதரகத்தின் கான்சல்-ஜெனரல் வேணு ராஜாமணி கருத்து தெரிவிக்கையில், இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி அபரிதமாக இருக்கின்றது.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு சிறப்பாக இருப்பதால், வர்த்தகம் உயர்ந்து வருகிறது என்று கூறினார்.

இந்தியாவில் இருந்து துபாய்க்கு பட்டை தீட்டப்பட்ட, பட்டை தீட்டப்படாத விலை உயர்ந்த ஆபரணக் கற்களும், தங்கம் போன்ற உலோகங்களும் 5.8 பில்லியன் டாலர் மதிப்பிற்கு (21.2 பில்லியன் தினார்) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல் துபாயில் இருந்து இந்தியாவிற்கு பட்டை தீட்டப்பட்ட, பட்டை தீட்டப்படாத விலை உயர்ந்த ஆபரணக் கற்களும், தங்கம் போன்ற உலோகங்களும் 2.7 பில்லியன் டாலர் மதிப்பிற்கு (9.9 பில்லியன் தினார்) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil