வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 23 பைசா குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.42.12/ 42.13 ஆக இருந்தது.
பிறகு வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் ரூ.42.23/ 42.24 என்ற அளவில் இருந்தது. வெள்ளிக் கிழமையைவிட, இன்று டாலரின் மதிப்பு 23 பைசா குறைந்தது.
வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.42.46/ 42.47.
மத்திய அரசு வர்த்தக, தொழில் நிறுவனங்கள் மற்ற நாடுகளில் வாங்கும், அந்நிய கடன் உச்சவரம்பை அளவை உயர்த்தி உள்ளது.
அத்துடன் ரிசர்வ் வங்கி பெட்ரோலிய நிறுவனங்களுக்கு தேவைப்படும் டாலரை, நேரடியாக விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் இந்த நிறுவனங்கள் அந்நியச் செலவாணி சந்தையில் இருந்து வாங்க தேவை இருக்காது. ஏற்றுமதியாளர்களும் அதிக அளவு டாலரை விற்பனை செய்தனர்.
இதனால் டாலர் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.