Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாலர் மதிப்பு 34 பைசா உயர்வு!

டாலர் மதிப்பு 34 பைசா உயர்வு!
, வியாழன், 22 மே 2008 (13:20 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 34 பைசா சரிந்தது.

இன்று காலை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய ரூபாய்க்கு நிகரான 1 டாலரின் மதிப்பு ரூ.43.21/ 43.22 என்ற அளவில் தொடங்கியது.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.42.84/42.85.

வர்த்தகம் தொடங்கிய பிறகு, காலை 10.50 மணியளவில் இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது அதிகரித்து 1 டாலர் ரூ. 43.18/ 43..19 என்ற அளவில் விற்பனையானது.

இந்திய ரூபாயின் மதிப்பு மே மாதத்தில் மட்டும் 6 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த வருட துவக்கத்தில் இருந்து, இது வரை 8.8 விழுக்காடு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சென்ற வருடம் 12 விழுக்காடு அதிகரித்தது நினைவிருக்கலாம்.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று நியுயார்க் முன்பேர சந்தையில் ஜூன் மாதத்திற்கான பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 135 டாலராக உயர்ந்தது.

அத்துடன் பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் சரிந்து வருகின்றன. இந்த வருடம் அந்நிய முதலீடு, இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது. இது வரை பங்குச் சந்தையில் இருந்து 270 கோடி டாலர் வெளியேறி உள்ளது.

இந்தியாவிற்கு சென்ற வருடம் 1,740 கோடி டாலர் முதலீடு வந்தது.

இந்த வருடம் பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் 16 விழுக்காடு வரை குறைந்துள்ளன (சென்ற வருடம் 47 விழுக்காடு அதிகரித்தது).

அந்நியச் செலவாணி சந்தையில் நேற்று, பிரிட்டனின் பவுண்டுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 பைசாவும், யூரோவுக்கு நிகரான மதிப்பு 71 பைசா குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil