Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாகனங்களுக்கு அவசர உதவி!

வாகனங்களுக்கு அவசர  உதவி!
, செவ்வாய், 6 மே 2008 (14:44 IST)
பொதுத்துறை காப்பீடு நிறுவனமான ஓரியண்டல் காப்பீடு நிறுவனமும், டி.வி.எஸ். குழுமத்தை சேர்ந்த மை டி.வி.எஸ். நிறுவனமும் இணைந்து காரில் பயணம் செய்பும் போது கார் பழுதாகிவிட்டால், உடனடியாக பழுதை நீக்கும் வசதிகளை செய்துத் தர உள்ளன.

இந்த புதிய திட்டத்தைப் பற்றி நேற்று சென்னையில் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான எம்.ராம்தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


தற்போது இந்த வசதி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் மட்டும் செயல்படுத்தப்படும், மற்ற பகுதிகளுக்கு கூடிய விரைவில் விரிவு படுத்தப்படும்.

இந்தியாவில் எந்த பொது காப்பீடு நிறுவனமும் அறிமுகப்படுத்தாத திட்டமாகும். இந்த திட்டத்தின் படி ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் காப்பீடு செய்து கொண்டுள்ள வாகனங்கள் பயணத்தின் போது பழுதானால் உடனடியாக ‘மை டி.வி.எஸ்’ நிறுவனம் இலவசமாக பழுது நீக்கி தரும். இதற்கான இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க வேண்டும். நகர்புறமாக இருந்தால் ஒரு மணி நேரத்திலும், தேசிய நெடுஞ்சாலையாக இருந்தால் 90 நிமிடங்களிலும், மற்ற உட்புற சாலை எனில் இரண்டு மணி நேரத்திற்குள் வாகனங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் இலவசமாக நீக்கி தரப்படும்.

இந்த திட்டம் பயணிகளின் வாகனத்திற்கு மட்டும் உரியது. வாகனம் வாங்கி பத்து வருடத்திற்குள் இருக்க வேண்டும்.

இந்த உதவி தேவைப்படுபவர்கள் இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு, வாகனத்தை பற்றிய விபரத்தையும், பழுது ஏற்பட்டு நிற்கும் இடம் பற்றிய தகவலை கூறவேண்டும். மை டி.வி.எஸ். நிறுவனம் அவர்களின் அங்கீகாரம் பெற்ற வாகனங்களை பழுது நீக்குபவர்களை அனுப்பும். இவர்கள் பழுதை நீக்குவார்கள்.

ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்திடம் காப்பீடு செய்து கொண்டுள்ள வாகனங்கள் விபத்திற்கு உள்ளானால், மை டி.வி. எஸ். நிறுவனத்திடம், உடனடியாக பணம் செலுத்தாமல், வாகனத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

டி.வி.எஸ். நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆர்.தினேஷ் கூறும் போது, இந்த உடனடியாக பழுது நீக்கும் வசதி, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

இதன் மூலம் ஓரியண்டல் காப்பீடு நிறுவனம், அதன் வர்த்தகத்தை நாடு முழுவதும் விரிவு படுத்த முடியும். இந்த புதிய திட்டத்திற்காக டி.வி.எஸ் நிறுவனம் ரூ.3 கோடி முதலீடு செய்யும் என்று கூறினார்.

இதே மாதிரி பழுது நீக்கும் சேவையை மை டி.வி.எஸ். நிறுவனம் ஏற்கனவே செய்து வருகிறது. இதற்கு இதில் சேரும் வாகன உரிமையாளர்கள் வருட கட்டணமாக ரூ.1,200 செலுத்த வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil