Newsworld News Business 0804 29 1080429023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் மதிப்பு 6 பைசா உயர்வு!

Advertiesment
அந்நியச் செலாவணி சந்தை டாலர் மதிப்பு
, செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (12:47 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 பைசா சரிந்தது.

காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.40.15 / 40.16 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி நிலவரம் ரூ.40.16/40.17.

ஆனால் வர்த்தகம் தொடங்கிய போது, 1 டாலர் ரூ.40.22 வரை விற்பனையானது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 6 பைசா குறைவு.

கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு, இன்று இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் வரத்து குறைவாகவே இருந்தது. அதே நேரத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள் அதிக அளவு டாலர் வாங்கின.

ரிசர்வ் வங்கி பொருளாதார கொள்கையை இன்று நண்பகல் அறிவிக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு டாலர் விற்பனை மிக குறைந்த அளவு இருந்ததால், டாலரின் மதிப்பு உயர்ந்து ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

பெட்ரோலிய நிறுவனங்கள் இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்க்கு பணம் வழங்குவதற்காக கடந்த சில நாட்களாக டாலரை வங்கினார்கள். இவை இன்று பிற்பகலில் டாலர் வாங்கலாம் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்கும் போது, ரூபாய் மதிப்பில் மாற்றம் இருக்கலாம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இது வரை இல்லாத அளவு சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 120 டாலராக அதிகரித்தது.

ரிசர்வ் வங்கி நாளை காலாண்டிற்கான கடன் கொள்கை அறிவிக்க போகின்றது, இதனால் வங்கிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் டாலரை வாங்குகவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil