Newsworld News Business 0804 28 1080428048_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமையல் எண்ணெய் ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும்!

Advertiesment
சமையல் எண்ணெய் ஏற்றுமதி தடை உற்பத்தியாளர்கள் சங்கம்
, திங்கள், 28 ஏப்ரல் 2008 (16:49 IST)
சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

சமையல் எண்ணெய் விலை அதிகரித்ததால், இதன் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் தடை செய்தது. அத்துடன் இறக்குமதி செய்யப்படடும் சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா ஆயில் போன்றவைகளின் இறக்குமதி வரியை முழுவதுமாக நீக்கியது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி வரியை 7.5 விழுக்காடாக குறைத்தது.

இந்நிலையில் சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், உலக அளவில் இந்திய சமையல் எண்ணெய்கான சந்தை பாதிக்கப்படும். எனவே ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும் என்று சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் கூறியுள்ளது.

இதன் தலைவர் அசோக் சேதியா மும்பையில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்தியாவில் வருடத்திற்கு 130 லட்சம் டன் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மிக சிறிய அளவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயை சுத்திகரிப்பது போன்றவைகள் செய்யப்பட்டு, அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உலக சந்தையில் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகளால் இந்திய சமையல் எண்ணெய் விற்பனை செய்வதற்கான சந்தை உருவாக்கப்பட்டது. இப்போது மத்திய அரசு தடை விதித்துள்ளதால், இந்தியாவின் நன் மதிப்பு பாதிக்கப்படும்.

எனவே மத்திய அரசு தடையை மறு பரிசீலனை செய்து, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவை சிறு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டும், மொத்தமாகவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.. வருடத்திற்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக சந்தையில் விலை அதிக அளவு இருந்தால் மட்டுமே எப்போதாவது நல்லெண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத்தை சென்ற மாதம், சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து விளக்கெண்ணெய் உட்பட எல்லாவித சமையல் எண்ணெய்க்கும் விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

இதை தொடர்ந்து விளக்கெண்ணெய்க்கு மட்டும் தடை நீக்கப்பட்டது. விளக்கெண்ணெய் பெயின்ட், மருந்து உற்பத்தி உட்பட பல்வேறு தொழில் துறையில் பயன்படுத்தப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil