காஷ்மீரில் விளையும் செர்ரி பழத்தை விமானம் மூலம அனுப்ப கட்டண சலுகை வழங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே செர்ரி பழங்கள் அதிக அளவு விளைகின்றது. இங்கிருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு செர்ரி பழங்களை விமானம் மூலம் அனுப்ப சரக்கு கட்டண சலுகை அளிப்பதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த சலுகை மே 1 ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் என ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் நேற்று ஸ்ரீநகரில் தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் இருந்து புறப்படும் ஒவ்வொரு விமானத்திலும் 100 கிலோ முதல் ஆயிரம் கிலோ வரை செர்ரி பழங்கள் அனுப்பி வைக்கப்படும். இங்கிருந்து மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதே போல் ரயில்வே அமைச்சரும், செர்ரி பழங்களை ஜம்முவில் இருந்து மும்பைக்கு அனுப்பு சிறப்பு பெட்டி வசதி அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.