வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய் மதிப்பு 3 பைசா அதிகரித்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.39.94/39.95 என்ற அளவில் இருந்தது. நேற்று இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.97/39.98.
பிறகு 1 டாலர் ரூ. 39.93 முதல் ரூ. 39.96 என்ற அளவில் விற்பனையானது.
ரிசர்வ் வங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி பொருளாதார கொள்கையை அறிவிக்க உள்ளது. ஏற்கனவே வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை அரை விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால் நிதிச் சந்தையில் இருந்து ரூ.18,400 கோடி பணப்புழக்கம் குறையும்.
இத்துடன் வட்டி விகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த வாரம் ரூபாயின் மதிப்பு அதிகரித்து. 1 டாலர் ரூ.40 என்ற அளவில் குறையும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.