Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பதப்படுத்த‌ப்ப‌ட்ட உணவு ஏற்றுமதிக்கு உதவி!

பதப்படுத்த‌ப்ப‌ட்ட  உணவு ஏற்றுமதிக்கு உதவி!
, வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (17:55 IST)
பதப்படுத்தப்பட்ட உணவு, விவசாய விளைபொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு ரூ.429 கோடி ஒதுக்கியுள்ளது.

நேற்று இந்த நிதியை மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு, 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் விவசாய விளை பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக ஒதுக்கியுள்ளது.

இதன்படி, பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிக்கும் பூங்காக்கள் அமைக்க, ஏற்றுமதிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.229 கோடி ஒதுக்கப்படும். இதன் போக்குவரத்து மாணியம் வழங்குவதற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்படும்.

இந்த இரண்டு திட்டங்களையும் அப்டா என்று அழைக்கப்படும் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் அமல்படுத்தும். தற்போது இந்த ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள விவசாய மற்றும் பதப்படுத்த உணவு பொருட்களின் ஏற்றுமதி ரூ.21,150 கோடி என்ற அளவில் உள்ளது. இதன் ஏற்றுமதி வருடத்திற்கு 11.5 விழுக்காடு அதிகரித்து வருகிறது.

இதை அடுத்த ஐந்து வருடத்தில் ரூ.36,510 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், உலக சந்தையில் மற்ற நாடுகளுடன் போட்டியிடும் வகையில் ஏற்றுமதி செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் போக்கு வரத்து செலவுகளுக்கு மா‌னியம் வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.

மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு கூட்டத்திற்கு பின் அரசு உயர் அதிகாரி கூறுகையில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்த தொடங்கிய இரண்டு வருடங்களுக்கு பிறகு, இதன் பலன்கள் பற்றி ஆய்வு செய்யப்படும். இந்த திட்டங்கள் உலக சந்தையில் இந்திய விவசாய விளைபொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டியிட வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த மாதம் கானா நாட்டில் நடைபெறவுள்ள அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் உலக அளவிலான வர்த்தகத்திற்கு, பொருட்கள் எந்த பிரதேசத்தை சேர்ந்தவை என்பதை நிர்ணயிப்பதற்கான விதி முறைகளை உருவாக்க, இந்தியாவின் நிலை பற்றிய கருத்துக்களை மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு ஒப்புதல் அளித்தது.

இந்த குழு கோகோ கோலா நிறுவனம் அதன் விரிவாக்க செலவுகளுக்காக ரூ.52.54 மில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கும் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் இந்தியாவிற்கு ரூ.205 கோடி அந்நிய நேரடி முதலீடு கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil