ரூபாயின் பணவீக்கம் 7.41 விழுக்காடு ஆக குறைந்துள்ளது.
பணவீக்க விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்ற வாரம் 7.14 விழுக்காடாக அதிகரித்தது.
மத்திய அரசு இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி பணவீக்கம் 7.14 விழுக்காடாக குறைந்தது. கடந்த எட்டு வாரமாக அதிகரித்து வந்த பணவீக்கம், இப்பொழுதுதான் முதன் முறையாக குறைந்துள்ளது.
ஏப்ரல் 5ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், மொத்த விலை பட்டியலின் அளவுகோலின் படி குறியீட்டு எண் 0.3% குறைந்து, 225.6 ஆக உள்ளது. இது இதற்கு முந்தைய வாரத்தில் 226 புள்ளிகளாக இருந்தது.
உணவுப் பொருட்களின் விலை குறியீட்டு எண் 0.6 விழுக்காடு குறைந்து குறியீட்டு எண் 228.5 ஆக உள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்தில் 227.8 ஆக இருந்தது.
இந்த வாரத்தில் தனியா விலை 3%, மக்காச் சோளம் விலை 1% குறைந்துள்ளது.
எண்ணெய் வித்து, பருப்பு வகைகளின் மொத்த விலை பட்டியலில் அளவுகோலின் படி குறியீட்டு எண் 226.6 இல் இருந்து 226.4 ஆககுறைந்தது. இதற்கு காரணம் எண்ணெய் கடுகு விலை 6 % குறைந்ததே.
அதே நேரத்தில் சூரியகாந்தி விதையின் விலை 17%, நிலக்கடலை, ஆமணக்கு, ஆளி விதைகளின் விலை தலா 1% அதிகரித்துள்ளது.
இதே போல் எரிசக்தி, மின் கட்டணம் ஆகியவற்றின் குறியீட்டு எண்கள் 341.4 இல் இருந்து 342 ஆக அதிகரித்து உள்ளது.
தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் விலை உயர்வால் இதன் குறியீட்டு எண் 191.1 இல் இருந்து 197.6 ஆக அதிகரித்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் விலை 0.05% அதிகரித்துள்ளது.
தாவர எண்ணெய், பருத்தி எண்ணெய் விலை 6% குறைந்துள்ளது. வெல்லத்தின் விலை 3%, கடுகு எண்ணெய், கடலை எண்ணெய் விலை 2%, விளக்கெண்ணெய் விலை 1% குறைந்துள்ளது.
மாநிலங்களவையில் நேற்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எல்லாவித நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். மாநில அரசுகளையும் விலை உயர்வை கட்டுப்படுத்த, பதுக்கி வைத்து இலாபம் சம்பாதிப்பவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார்.