வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் மாற்றமில்லை.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.39.96/39.98 என்ற அளவில் இருந்தது. பிறகு வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.39.96-39.97 என்ற அளவில் இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.95/39.96.
பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்த குறியீட்டு எண்கள் அதற்கு பிறகு அதிகரிக்க துவங்கின. அத்துடன் மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு நேற்று அதிகரித்தது.
இதனால் இந்திய அந்நியச் செலாவணி சந்தையிலும் இன்று டாலரின் மதிப்பு குறையவில்லை.
ரிசர்வ் வங்கி டாலரின் மதிப்பு ரூ.39.90 முதல் ரூ.40 என்ற அளவில் பராமரிக்க விரும்புகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரிக்கும் போது ரிசர்வ் வங்கி தலையிட்டு உபரி டாலரா அந்நியச் செலாவணி சந்தையில் இருந்து வாங்குகின்றது. இவ்வாறு டாலரின் மதிப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறது.
ரிசர்வ் வங்கி வெள்ளிக் கிழமை வெளியிட்ட தகவல்படி பிப்ரவரி மாதம் அந்நியச் செலாவணி சந்தையில் இருந்து 3.88 பில்லியன் டாலரை வாங்கியுள்ளது. இந்த வருடம் இதுவரை 17.50 பில்லியன் டாலர் வாங்கியுள்ளது.