Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே ரயில் பாதை!

Advertiesment
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே ரயில் பாதை!
, செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (14:05 IST)
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகம் அதிகரிக்க ரயில் பாதை அமைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி இந்தியா-ஈரான்-ரஷியாவிற்கிடையே இடையே ரயில் பாதை அமைக்கப்படும்.

ஈரானில் இருந்து வெளிவரும் டெக்ரான் டைம்ஸ் நாளிதழ் வெயிட்டுள்ள செய்தியின் படி, இந்த ரயில் பாதை ஈரானின் தென் கிழக்கு பகுதியில் உள்ள சபாகர் பிராந்தியத்தில் அமைந்துள்ள சுதந்திர பொருளாதார மண்டலத்திற்கும், மத்திய பிராந்தியத்தில் அமைந்துள்ள பஹிரிஜ் நகரையும் இணைக்கும் வகையில் அமையும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இந்தியா ரயில் பாதைக்கு முதலீடு செய்யும்.

இத்துடன் ஈரானின் துறைமுகங்களுக்கு இடையே ரயில் பாதை அமைக்க இந்தியா திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டம் வர்த்தக ரீதியாக இலாபகரமானதா என்பதை பற்றி பரிசீலிக்கபடும்.

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையேயான ரயில் பாதை அமைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஞாயிற்றுக் கிழமையன்று கையெழுத்தானது.

இதில் இந்தியாவின் சார்பில் இரயில்வே வாரிய தலைவர் கே.சி.ஜினாவும், ஈரான் சார்பில் ஈரான் ரயில்வே நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஹசன் ஜியாரி ஆகியோர் கையொப்பமிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜியாரி பேசும் போது, இந்தியா சுயேச்சையாகவே ரயில் இன்ஜின் தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்களையும், இயந்திரங்களையும் தயாரிக்கிறது. ஈரான் இந்தியுவுடன் இணைந்து பணியாற்ற கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பம் என்று கூறினார். இந்த திட்டம் பற்றி விரிவாக விவாதிக்க இந்தியாவைச் சேர்ந்த நிபுணர்கள் மே மாதத்தில் ஈரானுக்கு வருவார்கள் என்று கூறினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இந்தியா-ஈரான்-ரஷியாவுக்கு இடேயை ரயில் பாதை அமைக்கப்படும். அத்துடன் இந்தியா ஈரானைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி அளிக்கும். அத்துடன் சமிக்ஞை கருவிகள், ரயில் இன்ஜின், அதற்கு தேவையான உதிரி பாகங்களையும் வழங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil