Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பின்னலாடை ஏற்றுமதி பாதிப்பு!

பின்னலாடை ஏற்றுமதி பாதிப்பு!
, செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (13:49 IST)
திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடை அளவு குறைந்துள்ளது!

இந்தியாவில் பின்னலாடை ஏற்றுமதி செய்வதில் திருப்பூர் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளுக்கு பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக அளவில் ஜவுளி துறைக்கு கோட்டா முறை நீக்கப்பட்டதற்கு பின், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி சராசரியாக 15 விழுக்காடு அதிகரித்து வந்தது. இந்நிலையில் சென்ற நிதி ஆண்டில் (2007-08) பின்னலாடை ஏற்றுமதி குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரில் இருந்து 2006-07 நிதி ஆண்டில் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்புள்ள பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. இது இந்த நிதி ஆண்டில் 9,950 கோடியாக குறைந்து விட்டது.

இந்த விவரம் திருப்பூரில் உள்ள வங்கிகள் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கிய ஏற்றுமதி கடன் விபரங்களின் அடிப்படையில்,திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ஏ.சக்திவேல் திரட்டிய தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.

உலக அளவில் ஜவுளி வர்த்தகத்தில் இருந்த கோட்டா முறை நீக்கப்பட்டதற்கு பிறகு, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வருடத்திற்கு சராசரியாக 15 விழுக்காடு அதிகரித்து. இது தற்போது 25 விழுக்காடு குறைந்துள்ளது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய நகரமாக 1985ஆம் ஆண்டு இடம் பெற்றது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும ஏற்றுமதி அதிகரித்து வந்துள்ளது. இந்த வருடம் தான் முதன் முறையாக குறைந்துள்ளது.

இந்த நிலையை மாற்ற மத்திய அரசு விதிக்கும் ப்ரின்ஞ்ச் பெனிபிட் டாக்ஸ் எனப்படும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு வழங்கும் சலுகை, வர்த்தகம் தொடர்பான செலவுகள் மீதான வரியை நீக்க வேண்டும். அத்தடன் மாநில அரசு வரி உட்பட பல்வேறு உள்ளூர் வரிகளையும், கட்டணங்களையும், ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். அப்போதுதான் ஏற்றுமதியாளர்களுக்கு நம்பிக்கை உண்டாகும். இவர்கள் தொழில் நுட்ப மேம்பாட்டு நிதியில் கடன் வாங்கி இயந்திரங்கள் உட்பட நிறுவனங்களை நவீன மயமாக்குவார்கள் என்று சக்திவேல் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil