Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏற்றுமதி வட்டி சலுகை தொடரும்!

ஏற்றுமதி வட்டி சலுகை தொடரும்!
, திங்கள், 7 ஏப்ரல் 2008 (14:38 IST)
ஏற்றுமதியாளர்கள் வாங்கும் கடனுக்கு வழங்கும் வட்டி சலுகை தொடரும் என்று தெரிகிறது.

ஏற்றுமதி நிறுவனங்கள் அந்நிய நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டர் பெற்றவுடன், அந்த சரக்கு உற்பத்தி செய்வதற்கு மூலப் பொருட்கள் வாங்குவது உட்பட பல்வேறு செலவுகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதே போல் சரக்கு ஏற்றுமதி செய்த பிறகு, அதன் மொத்த மதிப்பில் குறிப்பிட்ட விழுக்காடு கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் சலுகை வட்டியில் வழங்கப்படுகிறது.

இந்த வட்டி சலுகை காலம் சென்ற வாரத்துடன் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் பணவீக்கம் அதிகரிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களினால் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை வட்டியில் கடன் வழங்குவது நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. இதை மத்திய நிதி அமைச்சகம் கூடிய விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதற்கு முன் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. இது கடந்த 12 விழுக்காடு வரை அதிகரித்தது. இதனால் ஏற்றுமதி நிறுவனங்களின் இலாபம் குறைந்தன. இந்த நெருக்கடியில் இருந்து ஏற்றுமதியாளர்களை காப்பதற்கு மத்திய அரசு கடனுக்கான வட்டியை குறைத்தது. இந்த சலுகை முதலில் கைத்தறி உட்பட ஜவுளி, ஆயத்த ஆடைகள்,தோல் பொருட்கள்,கைவினை பொருட்கள்,பொறியியல் இயந்திரங்கள், சாதனங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, கடல் சார் உணவு, விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் ஆகிய 9 வகை ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டன. பிறகு சிறிய, நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் நீடிக்கப்பட்டது.

இந்த சலுகை சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் சணல் பொருட்கள், கம்பளி தரை விரிப்பு, முந்திரி, காபி, தேயிலை, பிண்ணாக்கு, பிளாஸ்டிக் பொருட்கள், லினன் ஆகியவைகளுக்கும் நீட்டிக்கப்பட்டன.

விவசாய துறைக்கு வழங்கும் கடனுக்கு முன்னுரிமை துறை கடனாக 7 விழுக்காடு வசூலிக்கப்படுகிறது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 9 விழுக்காடு சலுகை வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil