வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் அதிக மாற்றமில்லை.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.39.90 /39.92 என்ற அளவில் இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 1 டாலரின் மதிப்பு ரூ.39.95/39.96
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது, டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் டாலரின் மதிப்பு அதிகரித்தது. இதனால் வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட அதிக வேறுபாடு இல்லாமல் ஆனது.
பங்குச் சந்தை குறியீட்டு எண் அதிகரித்திருப்பதால், அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் வரத்து அதிக அளவு உள்ளது. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆனால் ரிசர்வ் வங்கி டாலரின் மதிப்பு ரூ.40 என்ற அளவிலேயே பராமரிக்க விரும்புவதால், டாலரின் மதிப்பு சரியாமல் இருக்க, ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் சார்பாக வங்கிகள் அதிக அளவு வரும் டாலரை வாங்கி விலையை சமன்படுத்துவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.