Publish Date: Thu, 03 Apr 2008 (10:04 IST)
Updated Date: Wed, 02 Apr 2008 (13:01 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 பைசா குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.39.95/39.96 என்ற அளவில் இருந்தது. திங்கட் கிழமை இறுதி நிலவரம் 1 டாலரின் மதிப்பு ரூ. 39.90/39.91. நேற்று அந்நியச் செலவாணி சந்தைக்கு விடுமுறை.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும், இந்திய பங்குச் சந்தையிலும் காலையில் இருந்தே குறியீட்டு எண்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அந்நிய செலாவணி சந்தையில் டாலர் அதிக அளவு வரத்து இருக்கும்.
இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து உள்ளது.