இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான, மாருதி நிறுவனத்தின் கார் விற்பனை இந்த நிதி ஆண்டில் (2007-08) 13.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த நிதி ஆண்டில் மொத்தம் 7,64,842 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் 6,74,924 கார்களை விற்பனை செய்து இருந்தது.
அதே நேரத்தில் இந்த மார்ச் மாதத்தின் விற்பனை சென்ற ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.1 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த மார்ச் மார்ச் மாதத்தில் 70,296 கார்களை விற்பனை செய்துள்ளது (சென்ற மார்ச்சில் விற்பனை 71,772).
இந்த நிதி ஆண்டில் உள்நாட்டில் 7,11,818 கார்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற வருட்த்தைவிட 12 விழுக்காடு அதிகம். (சென்ற வருடம் 6,35,629). உள்நாட்டு விற்பனை மட்டுமல்லாது, அயல் நாடுகளுக்கு ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.
அந்நிய நாடுகளுக்கு 53,024 கார்கள் ஏற்றுமதி செய்துள்ளது. இது சென்ற வருடத்தை விட 34.9 விழுக்காடு உயர்வு (சென்ற வருடம் 39,295).
இந்த நிதி ஆண்டில் எம்800 ரக கார்களின் விற்பனை குறைந்துள்ளது. இந்த ரக கார்கள் 69.553 விற்பனையாகி உள்ளது. இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.2 விழுக்காடு (சென்ற வருடம் 79,245).
ஆனால் ஆல்டோ, ஜென் எஸ்ட்லோ, வேகன்-ஆர், சுவிப்ட் ரக கார்களின் விற்பனை 13.4 விழுக்காடு உயர்ந்துள்ளது. இவை இநத நிதி ஆண்டில் 4,99,280 விற்பனையாகி உள்ளன (சென்ற வருடம் 4,40,375).
சமீபத்தில் புதிதாக அறிமுகப்படுத்திய சேடன் டிஜியர் ரக கார்கள் 5,658 விற்பனையாகி உள்ளது.
இந்தியாவில் அதிக அளவு விற்பனையாகும் காராக மாருதி நிறுவனத் தாயாரிப்பான ஆல்டோ உள்ளது. இது சென்ற நிதி ஆண்டில் 2,27,173 விற்பனையாகி உள்ளது. இதன் விற்பனை தொடர்ந்து இரண்டாவது வருடமாக 2 இலட்சத்தையும் தாண்டி சாதனை படைத்துள்ளது.