Publish Date: Fri, 28 Mar 2008 (13:05 IST)
Updated Date: Fri, 28 Mar 2008 (12:59 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2.50 பைசா அதிகரித்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.12/40.13 என்ற அளவில் இருந்தது. பிறகு டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு 2.50 பைசா அதிகரித்தது. 1 டாலர் ரூ.40.07 முதல் 40.08 என்ற விலையில் வர்த்தகம் நடந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலரின் மதிப்பு ரூ. 40.95/40.1050.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும், இந்திய பங்குச் சந்தையிலும் காலையில் இருந்தே குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. இதனால் அந்நிய செலாவணி சந்தையில் டாலரின் வரத்து அதிகரித்து உள்ளது.
கடந்த மார்ச் 19ஆம் தேதி முதல் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 70 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன.