Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூபாயின் மதிப்பு 6 பைசா உயர்வு!

ரூபாயின் மதிப்பு  6 பைசா உயர்வு!
, திங்கள், 24 மார்ச் 2008 (12:46 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 பைசா அதிகரித்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.37 /40.38 என்ற அளவில் இருந்தது. சென்ற வாரம் புதன் கிழமை 1 டாலரின் மதிப்பு ரூ. 40.43/40.44 ஆக இருந்தது. சென்ற வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமை அந்நிய செலவாணி சந்தைக்கு விடுமுறை.

இந்திய பங்குச் சந்தையில் இன்று காலையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தது. இதனால் ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil