வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 பைசா அதிகரித்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.63/40.64 என்ற அளவில் இருந்தது.
நேற்று ரூபாயின் மதிப்பு 27 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று அந்நியச் செலாவணி வங்கியில் அதிக அளவு டாலர் விற்பனைக்கு வந்ததால், டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.40.60 என்று மூன்று முதல் நான்கு பைசா வித்தியாசத்தில் வர்த்தகம் நடந்ததாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.