Publish Date: Tue, 11 Mar 2008 (15:43 IST)
Updated Date: Tue, 11 Mar 2008 (15:42 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் அதிக மாற்றமில்லை.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.48/40.49 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி விலையை விட 0.50 பைசா அதிகம். நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 40.4850/40.4950.
பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் அதிகரித்ததால், அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடந்த போது ரூபாயின் மதிப்பு மூன்று முதல் நான்கு பைசா வரை அதிகரித்தது.
இன்று அந்நியச் சந்தையின் போக்கு, பங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கத்தை பொறுத்தே இருக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.