Publish Date: Mon, 10 Mar 2008 (13:34 IST)
Updated Date: Mon, 10 Mar 2008 (13:33 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 பைசா குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.68./40.69 என்ற அளவில் இருந்தது. இது வெள்ளிக்கிழமை இறுதி விலையை விட 16 பைசா அதிகம். வெள்ளிக்கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ. 40.52/40.53.
பங்குச் சந்தையில் சரிவாலும், பெட்ரேலிய நிறுவனங்களுக்காக வங்கிகள் அதிக அளவு டாலரை வாங்குவதால் டாலர் மதிப்பு அதிகரித்து, ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவு, இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அளவு குறைந்தது.