Publish Date: Fri, 07 Mar 2008 (13:00 IST)
Updated Date: Fri, 07 Mar 2008 (12:59 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 17 பைசா குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.47/40.48 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய மாலை விலையை விட 17 பைசா அதிகம். நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 40.30/40.31.
அந்நியச் செலாவணி சந்தையில் அதிக அளவு டாலர் வரத்து உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்த அளவு டாலரின் மதிப்பு அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு முதன்முறையாக இன்று குறைந்தது.
சர்வதேச அந்நியச் செலவாணி சந்தையில் யூரோ,யென் போன்ற மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதால், டாலரை அதிக அளவு விற்பனை செய்கின்றனர். இதனால்தான் டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.