Publish Date: Mon, 03 Mar 2008 (15:13 IST)
Updated Date: Mon, 03 Mar 2008 (15:12 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்நிய ரூபாய் மதிப்பு 17 பைசா குறைந்தது. கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு, இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.
காலையில் 1 டாலர் மதிப்பு ரூ. 40.18/40.19 என்ற அளவில் இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ. 40.01/40.02.
காலையில் பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் கடுமையாக சரிந்தன. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள பங்குகளை விற்பனை செய்தன. அத்துடன் புதிய முதலீடுகளும் இல்லை. இதனால் அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் வரத்து குறைந்து.