பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.10,165 கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி மத்திய அரசு அடுத்த நிதி ஆண்டில் (2008-09) தேசிய நீர் மின் உற்பத்தி கழகம் உள்ளிட்ட இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் குறிப்பிட்ட அளவு விற்பனை செய்வதன் மூலம் ரூ.10,165 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.
இந்த நிதி தேசிய மூதலீடு நிதியத்தில் சேர்க்கப்படும்.
இந்த நிதி சமூக நல திட்டங்களுக்கும், குறிப்பிட்ட அளவு நிதி இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளப்படும். 44 பொதுத் துறை நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இவைகளுக்கு அரசு ரூ.16 ஆயிரத்து 436 கோடி பங்கு முதலீடாகவும், ரூ.3,003 கோடி கடனாகவும் வழங்கி உள்ளது.
அரசு அதிக அளவு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலம், அதன் உண்மையான மதிப்பு முடங்கி விடாமல் இருக்குமாறு செய்யும். இதன் மூலம் இவற்றின் நிர்வாகம் மேம்பாடு அடைய செய்ய எண்ணியுள்ளது என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.