வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் 1 டாலரின் மதிப்பு ரூ.39.94/39.96 ஆக இருந்தது.
இது நேற்றைய இறுதி விலையை விட 2 பைசா குறைவு, நேற்று மாலையில் 1 டாலரின் மதிப்பு ரூ 39.92/39.93 ஆக இருந்தது.
ஆனால் காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, 1 டாலர் ரூ.39.99/40.00 என்ற விலையில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி விலையை விட 8 பைசா அதிகம்.
அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை மேலும் குறைக்கலாம் என்ற தகவலால், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இன்று பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
கடந்த மூன்று நாட்களாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காண்பித்தனர்.