வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், டாலரின் மதிப்பு கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் இன்று காலை 1 டாலரின் மதிப்பு ரூ.40 ஆக அதிகரித்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலரி்ன் மதிப்பு ரூ.39.95/39.97 ஆக இருந்தது. நேற்றைய இறுதி விலை ரூ.39.90/39.91. இன்று மட்டும் டாலரின் மதிப்பு 5 பைசா அதிகரித்தது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் டாலரின் மதிப்பு 31 பைசா அதிகரித்துள்ளது.
காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, 1 டாலரின் விலை ரூ.40 க்கும் அதிகரித்தது.
இன்று அதிக பெட்ரோலிய நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், வங்கிகள் அதிக அளவு டாலர்களை வாங்கினார்கள். அதே நேரத்தில் டாலரின் வரத்து குறைந்த அளவே இருந்தது. அத்துடன் அந்நிய முதலீட்டு நிறுவனங்களும் பங்குகளை விற்பனை செய்வதால் டாலரின் தேவை அதிகரித்தது.
இந்த காரணங்களினால் டாலரின் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.