Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை‌யி‌ல் சர்வதேச நகை, ரத்தின கண்காட்சி!

Advertiesment
செ‌ன்னை‌யி‌ல் சர்வதேச நகை, ரத்தின கண்காட்சி!
, சனி, 16 பிப்ரவரி 2008 (10:50 IST)
சென்னையில் நகை வியாபாரிகளுக்கான இந்திய, சர்வதேச நகை, ரத்தின கண்காட்சி ‌‌பி‌ப்ரவ‌ரி 17ஆ‌ம் தே‌தி வரை நட‌க்‌கிறது.

செ‌ன்னை ந‌ந்த‌ம்பா‌க்க‌ம் வ‌ர்‌த்தக மைய‌த்த‌ி‌ல் சென்னை நகை, வைர வியாபாரிகள் சங்கம் சார்பில் 4-வது இந்திய, சர்வதேச நகை, ரத்தின கண்காட்சி 3 நா‌ள் நடக்கிறது. இ‌ந்த க‌ண்கா‌ட்‌சியை கவிஞர் கனிமொழி தொடங்கி வைத்த‌ா‌ர்.

இந்த நகை, ரத்தின கண்காட்சி 17ஆ‌ம் தேதி வரை நடக்கிறது. இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, சூரத், கேரளா, ஹைதராபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், கொல்க‌ட்டா, ஆக்ரா, கோவை உள்பட பல்வேறு இடங்களைச் சேர்ந்த தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தினம் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் 160 ஸ்டால்கள் அமைத்துள்ளன. 100-க்கும் மேற்பட்ட டிசைன்களில் தங்க, வைர நகைகள், மணமகள் அலங்கார நகைகள் அணிவகுத்துள்ளன.

மலேசியா, துபாய், பெல்ஜியம், சீனா, பாங்காங், தாய்லாந்து ஆகிய அய‌ல்நாடுகளைச் சேர்ந்த நகை, ரத்தின வியாபாரிகளும் ஸ்டால்கள் அமைத்துள்ளனர். இந்த கண்காட்சியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள `கேரளா பிரிவில்' எடை குறைந்த கையால் வடிவமைக்கப்பட்ட தங்க நகைகளான செயின், நெக்லஸ், ஜீம்கா, காதணி, கம்மர்மண்ட், ஆர்ம்பேண்ட், பதக்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, திருப்பதி வெங்கடாசலபதி, சுவாமி ஐயப்பன் மற்றும் இயேசுநாதர் உருவம் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டு, தங்கத்தாலான பிரேமில் போட்டோ தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.3,500 முதல் ரூ.இர‌ண்டரை லட்சம் வரை `தங்க போட்டோக்கள்' உள்ளன. தங்கத்திலான `ஜாக்கெட்' 550 கிராம் சொக்கத்தங்கத்தில் ரூ.ஆறரை லட்சம் செலவில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பது பெண்களை சுண்டி இழுக்கிறது.

ரூ.4 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தில் உருவாக்கப்பட்டு உள்ள `தாஜ்மகால்' அனைவரையும் குறிப்பாக காதலர்களை கவர்கிறது. 150 கிராம் முதல் 250 கிராம் வரை எடையுள்ள ஒட்டியாணம் அற்புதமான வடிவமைப்புடன் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டியாணம் ரூ.2 லட்சம் முதல் கிடைக்கிறது. நாடு முழுவதும் உள்ள பிரபல நகைக் கடைகளை ஒரே இடத்தில் பார்ப்பது போல பிரமிப்பூட்டும் இந்த நகை, ரத்தின கண்காட்சியை பார்ப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி ‌கிடையாது.

Share this Story:

Follow Webdunia tamil