இந்தியாவில் 25 அயல்நாட்டு முதலீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், நாட்டின் பல்வேறு துறைகளில் ரூ.5,582.82 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.
அயல்நாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சரிடம் 28 அயல்நாட்டு முதலீடுகள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் 25 பரிந்துரைகளுக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்துள்ளார். இதில் அயல்நாடு வாழ் இந்தியர்களின் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, தொலைத்தொடர்பு துறையில் ரூ.1,950 கோடி, சுற்றுலாத்துறையில் ரூ.526 கோடி, உள்நாட்டு விமான சேவைத்துறையில் ரூ. 131.20 கோடி, சுகாதாரத்துறையில் ரூ.155 கோடி, தகவல் மற்றும் தொடர்பியல் துறையில் ரூ.78 கோடி உட்பட மொத்தம் இந்தியாவில் ரூ.5,584.82 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.