Publish Date: Thu, 14 Feb 2008 (15:47 IST)
Updated Date: Thu, 14 Feb 2008 (15:47 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரி்ன் மதிப்பு 8 பைசா குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ.39.68/39.69 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி விலையை விட 8 பைசா குறைவு. நேற்றைய இறுதி விலை 39.76/39.77.
பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு முதலீடு செய்வதாலும், ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை செய்வதால் டாலர் வரத்து அதிக அளவு இருந்தது. இதுவே டாலரின் மதிப்பு குறைவதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பெட்ரோலிய நிறுவனங்கள் அதிக அளவு டாலரை மதிப்பு ரூ.1.50 பைசா அதிகரித்து, 1 டாலர் ரூ.39.69/39.70 என்று விற்பனையானது.